மேம்பட்ட புலன் Jeffersonville, Indiana, USA 59-12-27E 1. இன்று காலையில் கிடைக்கப் பெற்ற அந்த ஆசீர்வாதத்தை நான் இப்பொழுதும் விருந்துண்டு கொண்டிருக்கிறேன். ஓ , மிக அதிகமானதொரு ஆசீர்வாதம்! நாம் ஒன்று கூடி வருகையில், தேவன் நமக்குச் செய்யும் காரியங்கள் நமக்குத் தெரிவதில்லை. நாம் தேவனுக்கு இந்த பிரதிஷ்டையை செய்தது முதல், காரியங்கள் எவ்விதம் இங்கு நடந்தேறி வருகின்றன என்பதை கவனித்தீர்களா? ஆசீர்வாதத்துக்கு மேல் ஆசீர்வாதம், வல்லமைக்கு மேல் வல்லமை, மகிமைக்கு மேல் மகிமை! அது மிகவும் அற்புதமாக இருந்து வருகிறது. அவர் அதை தொடர்ந்து செய்வார். நான் ஜெபித்த இந்த உறுமால்கள் இங்குள்ள யாருக்கோ சொந்தமானவை. 2.இதைக்குறித்து ஓரிரண்டு வினாடி குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, நீங்கள் கிறிஸ்துமஸ் வெகுமதியாக எனக்கு வாங்கித் தந்த துணி 'சூட்டு'க்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பெட்டியிலும் அது தான் இருந்ததா, சகோ. நெவில்? (சகோ. நெவில் ஆம் ஐயா, ஆம் ஐயா'' என்கிறார்- ஆசி.). ஆம், ஐயா. ஆம் துணி சூட்டு. பிரசங்கிமார்கள் எப்பொழுதுமே துணி சூட்டு உபயோகிக்கலாம் (அதை அணிந்த போது எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது). அருமையான செயல், அது நல்லது. பிரசங்கிமார்களுக்கு அதிகமாக வியர்க்கின்றது, அது மற்றவர்களுக்கு நேரிடுவதைக் காட்டிலும் துணிகளை விரைவில் கெடுத்து விடுகிறது. எனவே பாருங்கள், ஒரு பிரசங்கிக்கு உடுக்க அதிகம் துணிகள் விரைவில் தேவைப்படுகின்றன. நல்ல துணிகள் .... மலிவான பருத்தி துணி விரைவில் பாழாகி விடுகின்றது. எனவே இப்படிப்பட்ட ஒரு நல்ல சூட்டு நன்றாக உழைக்கும். சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் கர்த்தருடைய ஊழியருக்கு இந்த துணிகளைக் கொடுத்து ஆதரிக்கின்றீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.“மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'' என்றார் இயேசு. எனவே நீங்கள் இரண்டு ஊழியக்காரருக்கு 'சூட்'டை வாங்கிக் கொடுக்கவில்லை, இயேசுவுக்கே இரண்டு சூட்டுகளை வாங்கிக் கொடுத்தீர்கள். அப்படித்தான் அவர் கூறினார்'' அதை எனக்கே செய்தீர்கள்' என்று. 3.இன்று காலையில் கிடைக்கப் பெற்ற அந்த சிறு பரலோக தொடுதல், அதை கவனித்தீர்களா? பீட அழைப்பு எதுவும் இருக்கவில்லை. ஒன்றும் இருக்கவில்லை; ஆனால் செய்திக்குப் பிறகு பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைக் குளிப்பாட்டி புத்துணர்ச்சி ஊட்டினார், தேவனுடைய மகிமை அசைவாடினது. அவர் மேலும் கீழும் சுற்றிலுமிருந்து வரத் தொடங்கினார். லூயிவிலிலுள்ள வால் நட் வீதி பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்த மிகவும் அருமையான பாப்டிஸ்டு நண்பர்கள் சிலர், உட்பாதையில் நின்றுக் கொண்டு தேவனுடைய வல்லமையில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன் . ஓ, என்னே! ஆராதனைக்குப் பிறகு அவர்களை நான் சந்தித்தேன். அவர்கள், ''அது தேவனுடைய வல்லமை' என்றனர். நான், ''அது சரியே. நீங்கள் நிச்சயமாக நீங்கள் நிச்சயமாக சரியாய் கூறினீர்கள்“ அதுதான் தேவனுடைய வல்லமை என்றேன். தேவனுடைய வல்லமை! அதை விவரிக்க உங்களுக்கு சொற்கள் போதாது. என்ன சொல்வதென்று உங்களுக்கு தெரியாது. பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தை தம் கட்டுக்குள் எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்று உங்களுக்குத் தெரியாது. அமைதியாக, இனிமையாக, தாழ்மையாக நொறுக்கப்படுதல். ஓ, சகோதரன் பாட்,அது எனக்கு பரலோகம். அந்த உணர்ச்சியை அதில் பெற விரும்பும் பழைய பாணியிலானவர்களில் நானும் ஒருவன், பாருங்கள். 4.காலஞ்சென்ற பால் ராடர் கூறினது போல அவர் தன்னுடைய .... ஒரு சமயம் அவர் ஒரு கதை சொன்னார். அவரும் ஒரு மேம்பட்ட புலன் அவருடைய மனைவியும் மேசையினருகில் உட்கார்ந்து கொண்டிருந்தனராம். அவருடைய மனைவி எங்கோ போக வேண்டுமென்று அல்லது எதையோ செய்ய வேண்டுமென்று விரும்பினாளாம். அவர் அவளிடம், “என்னால் முடியாது'' என்று சொல்லி விட்டு அவளுடைய வாயை அடைத்து விடுவாராம். அவர் பார்த்த போது, அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவள் இவ்வளவு எளிதாக புண் பட்டால், புண்பட்ட நிலையிலேயே அவள் இருக்கட்டும்'' என்று மனதில் எண்ணிக் கொண்டார். எனவே அவர், ஆண்மைத்தனம் கொண்டவரைப் போல, கை துடைக்கும் காகிதத்தை மடித்து அவருடைய தட்டின் மேல் வைத்தார். 5.அவள் எப்பொழுதும் கதவருகில் நின்று கொண்டு, அவரை முத்தமிட்டு வழியனுப்புவது வழக்கம். அவர் கதவுக்கு வெளியே செல்கையில், அவருக்கு கையாட்டுவாள். அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் வரைக்கும், அது அவரை மகிழ்ச்சியான நிலையில் வைத்திருக்கும். அன்று காலை, அவர் வெளியே செல்லப் புறப்பட்டபோது, அவள் கதவண்டையில், நின்று கொண்டிருந்தாள். அவர் அவளை முத்தமிட்டு, வாசல் வரைக்கும் நடந்து சென்று, வாசல் கதவைத் திறந்து, திரும்பிப் பார்த்த போது, அவள் தலைகுனிந்த வண்ணம், இன்னும் புண்பட்டவளாய் கதவண்டையில் நின்று கொண்டிருந்தாள். அவர் அவளுக்கு கையாட்டி விடை பெற்றாராம். அவளும் கையாட்டி வழியனுப்பினாளாம். 6.அவர் தெருவில் சென்று கொண்டிருந்த போது, ''நான் வீடு திரும்பும் முன்னர், எனக்கு ஏதாவதொன்று நேரிட்டு விட்டால், அல்லது அவளுக்கு ஏதாவதொன்று நேர்ந்தால், தேவன் எங்களை காட்சியிலிருந்து அழைத்துக்கொள்வார். அவள் எவ்வளவு நல்லவள். எவ்வளவு இனியவள்'' என்றுமனதில் எண்ணினாராம். அவர் தெருவில் செல்லச் செல்ல, அவருடைய இருதயம் அதிகமாக வேதனையடைந்ததாம். எனவே அவர் திரும்பி ஓடி வந்து, வாசல்கதவைத் திறந்து, வீட்டிற்குள் ஓடி, கதவைத் திறந்தாராம். அவர் கதவைத் திறந்தபோது, யாரோ அழும் சத்தம் கேட்டது. அவர் சுற்றிலும் பார்த்த போது, அவள் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். அவர், ''என்னை மன்னித்துக் கொள், நான் மன்னிப்பு கோருகிறேன்'' என்று கேட்கவில்லையாம். அவர் ஒன்றுமே சொல்ல வில்லை. அவர் அவளைப் பிடித்து இழுத்து, முத்தமிட்டு, வெளியே நடந்து விட்டாராம். அவர் வாசலை விட்டு வெளியே சென்ற போது,அவள் மறுபடியும் கதவண்டையில் நின்று கொண்டிருந்தாள். அவர் ''விடைபெறுகிறேன்'' (bye) என்றார். அவளும் முதலில் செய்தது போலவே விடை கொடுத்து வழியனுப்பினாள். ஆனால் இரண்டாம் முறை அவள் செய்த போது, அதில் உணர்ச்சி கலந்திருந்தது. எனவே அது அப்படித்தான் உள்ளது. அது உணர்ச்சி கலந்திருக்குமானால்,பாருங்கள், அது உண்மையில் தேவனிடத்திலிருந்து வந்த ஒன்று. 7.சில மாதங்களுக்கு முன்பு, நாம் சகோ. சாத்மனை புதிய தர்மகர்த்தாவாக நியமனம் செய்தோம். நிதியாண்டின் முடிவில், ஜனவரி முதலாம் தேதியில், மேய்ப்பர்கள், டீக்கன்மார்கள் போன்ற அலுவல்கள் அனைத்தும் முடிவு பெறுகின்றன என்று தர்மகர்த்தாக்களும் மற்றவர்களும் அறிந்துள்ளனர் என்று எனக்கு நிச்சய முண்டு. அவர்கள் தொடர்ந்து இருக்க விரும்பினால் மேய்ப்பர்கள் அல்ல. நான் அவர்களைக் கூறவில்லை. தர்மகர்த்தாக்கள், டீக்கன் மார்கள், ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரையே கூறுகின்றேன். மேய்ப்பர் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீடித்திருக்கிறார். பிறகு அவர்கள் .... ஜனங்கள், அதாவது குழுவிலுள்ள தர்மகர்த்தாக்கள், டீக்கன்மார்கள், ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து இருக்க விரும்பினால், அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு தொடர்ந்து இருக்க பிரியமில்லை என்றால், அவர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும், அவர்களுக்கு விரோதமாக ஒன்றுமில்லை. இல்லையென்றால், அவர்கள் அடுத்த ஆண்டிலும் தொடருகின்றனர். அவர்கள் தொடர்ந்து இருக்கவில்லை என்றால், அவர்கள் தேர்தல் நடத்தி, வேறொரு தர்மகர்த்தாவை நியமிப்பார்கள் - அது எந்த அலுவலோ அந்த அலுவலில். 8.எனவே அது ஒரு மனிதனை, நிர்வாக குழுவில்பணி புரிய, அவருடைய வாழ்நாள் முழுவதும் கட்டிப் போடுவதில்லை. தேவன் அவரோடு கூட இருந்து அவருக்கு உதவி செய்கிறார் என்றும், அவருடைய அல்லது அவளுடைய பாகத்தை ஏற்று, தேவனுடைய வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று அவருக்கு உணர்வு இருக்குமென்றால், எங்களுடன் சேர்ந்து சேவை செய்ய அவர்களைக் கொண்டிருக்க நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்போம். பாருங்கள்? அந்தவிதத்தில், ஒரு நபர் ஒரு ஆண்டு பணி புரிந்து, அவருக்கு பிடிக்கின்றதா என்று காண அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. எங்கள் தர்மகர்த்தாக்களில் சிலர் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே வருகின்றனர் - டீக்கன்களும் கூட. அது மிகவும் அருமையானது. அவர்களுக்கு குறிப்பிட்ட காலவரை எதுவுமில்லை. தர்மகர்த்தா அல்லது மேய்ப்பன், அல்லது நிர்வாகக் குழுவிலுள்ள எவருக்காகிலும் தொடர்ந்து பணிபுரிய விருப்பமில்லை என்றால்,அப்பொழுது அவர்கள் சபைக்கு தெரியப்படுத்துகின்றனர். அவர்களுடைய இடத்தில் வேறு யாரையாகிலும் வைக்கின்றனர். 9.இன்றிரவு அது தான் நடந்துள்ளது, சகோ.மார்கன். சகோ. வில்லியம் மார்கன் தனது தர்மகர்த்தா பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அவர்களுக்கு வேறொரு தர்மகர்த்தா தேவைப்பட்டது. சகோ. சாத்மன் தர்மகர்த்தாவாக நியமனம் செய்யப்பட்டு, இன்றிரவு நிர்வாகக் குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டார். சபையைப் பொறுத்த வரையில் இது உத்தியோக சம்பந்தமானது. நமது சபையில், சபைக்கு சுயாதீனம் அளிக்கப்பட்டுள்ளது. சபை தர்மகர்த்தாவை நீக்குகிறது அல்லது நியமிக்கிறது. மேய்ப்பரை நீக்குகிறது, அல்லது நியமிக்கிறது. அது என்னவானாலும், சபையே எல்லாவற்றுக்கும் எல்லாமு மாயுள்ளது.அது அப்போஸ்தல முறையாகும். வேதாகம காலத்தில் இம்முறை தான் கையாளப்பட்டது. எனவே,எந்த ஒரு நபரும் சபையில் சர்வாதிகாரியாக அல்லது அதைப் போன்ற ஒன்றாக இல்லை என்று நாம் உணருகிறோம். அது நமக்கு வேண்டாம். ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு நபருக்கும், ஒரு வோட்டு தான் உள்ளது. எனக்கும் கூட சபையிலுள்ள மற்றவருக்கு உள்ளதுபோல, ஒரே ஓட்டு தான். நான் கூறுவது அல்ல, இந்த நிர்வாகக்குழு விஷயத்தில், சபை என்ன கூறுகிறதோ, அதுவே முக்கியம் வாய்ந்தது. அது உங்களுக்குப் பிடிக்கிறதா? ஓ, அது வேதப் பூர்வமானது என்பது என் கருத்து. அப்படித்தான் அது இருக்கவேண்டும். 10.கர்த்தருக்கு சித்தமானால், நாளை துவங்குகின்ற வாரம் எனக்கு முக்கியமான ஒன்றாய் இருக்கப் போகின்றது. எனக்கு வந்துள்ள அழைப்புகளின் பேரில், வரப்போகும்ஆண்டுக்காக, நான் தீர்மானம் எடுக்க வேண்டும். நான் அலுவலகத்துக்குச் சென்று,எல்லா அழைப்புகளையும் பொறுக்கி எடுத்து, அவைகளை வீட்டுக்கு கொண்டு வர விரும்புகிறேன். எனவே அடுத்த சில நாட்கள் நான் தேவனிடம் ஜெபித்து, நான் எங்கே செல்ல வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் என்னை வழி நடத்தும்படியாய் அவரிடம் வேண்டிக் கொள்ளப்போகிறேன். அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நாம் இப்பொழுது வாழவில்லை. அக்காலத்தில் தேவன் அவரை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு நடத்திச் சென்றார்.அவர் ஒரு பட்டினத்தில் சில மணி நேரம் இருந்து விட்டு, வேறொரு பட்டினத்துக்குச் சென்றார். ஆனால் இன்றைக்கோ அது வித்தியாசமான முறையாக, அமைப்பாக உள்ளது. போதகர் குழுக்கள், நிறைய காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது. 11.அதை நான் எவ்விதம் செய்கிறேன் என்றால், ஆப்பிரிக்காவிலிருந்து எனக்கு வந்துள்ள அனைத்து அழைப்புகளையும் நான் கொண்டு வந்து அவைகளை ஒருபுறம் வைத்து விடுகிறேன். அவ்வாறே இந்தியாவிலிருந்தும், கலிபோர்னியா,ஊடா, இன்னும் மற்ற இடங்களிலிருந்தும் வந்துள்ள அழைப்புகளை கொண்டு வந்து,அவைகளைத் தனித்தனியே குவியல்களாக வைத்து, அங்கேயே இருக்கும்படி விட்டு விடுகிறேன். அதன் பிறகு நான் நடந்து சென்று ஜெபிக்கிறேன். ஒருக்கால் காரில் ஏறி இரண்டு மூன்று நாட்களுக்கு சென்று விடுகிறேன். அங்கு ஜெபித்து விட்டு திரும்பி வருகிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லவேண்டுமென்று என் மனதில் எழுகின்றது. அது ஒருக்கால் என் மனதில் பதிந்துள்ள வெறும் எண்ணம் தானோ என்று கவனிக்கிறேன். அதன் பிறகு நான் .... அது திரும்பத் திரும்ப என் மனதில் எழுந்தால், அந்த குவியலுக்குச் சென்று அந்த குறிப்பிட்ட ஒரு மேம்பட்ட புலன் இடத்திலிருந்து வந்துள்ள அழைப்புக் கடிதத்தை எடுத்து, அதை படித்து, அது எங்குள்ளது என்று காண்கிறேன். அதன் பிறகு அங்கிருந்து .... 12.அவ்விதம் நான் செய்வதற்கு காரணம் இதுவே. எழுபத்திரண்டு மணி நேரம் விமானத்தில் பயணம் செய்வதை சிந்தித்துப் பாருங்கள். அது புயலில் சிக்கி, மேலும் கீழும் சென்று, சுற்றி வருகிறது. நீங்கள் எப்பொழுதாகிலும் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில் நீங்கள் மேலேயும், சில சமயங்களில் கீழேயும், விமானம் இரு பக்கங்களில் ஆடிக் கொண்டும், திடீரென்று கீழே இறங்கியும், மேகங்களின் வழியாகவும் தண்ணீர்களின் மேலும் இரவும் பகலும் மூன்றுநாட்கள் பறந்து செல்கின்றது. அதன்பிறகு நீங்கள் தரையில் காலடி எடுத்து வைக்கும்போது, உங்களை முதலில் சந்திப்பது சாத்தான். ''நல்லது,போதகர் குழு இதை சொன்னது, சிலர் உங்கள் சார்பாகவும், சிலர் வேற்றுமை கொண்டவர்களாய் இதற்கு எதிராகவும் வோட்டு போட்டனர்'' என்கின்றனர். பாருங்கள்?அப்பொழுது ஒருக்கால் தேவன் என்னை இங்கு வரச் சொல்ல வில்லை போலும்''என்று உங்களுக்குத் தோன்றிவிடுகிறது. ஆனால் நீங்கள் தேவனால் அனுப்பப்படும் போது, நீங்கள் சத்துருவைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள். நீங்கள், ''இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் காலடி எடுத்து வைக்கிறேன். நான் கர்த்தராகியஇயேசுவின் நாமத்தில் வந்திருக்கிறேன். அவருடைய வேலை முடிந்து தீருமளவும் நான் இங்கேயே தங்கியிருப்பேன்'' என்கிறீர்கள். பாருங்கள், அப்பொழுது நீங்கள் படைகளை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள். 13.எனவே, நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள். அது எனக்குத் தெரியும், தேவன் என்னை ஊக்குவித்து வழிநடத்தி, நான் சரியான தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்று இந்த வாரம் எனக்காகஜெபியுங்கள். எனக்கு சில சிறிது தாவிச் செல்லும் கூட்டங்கள் என்று நான் அழைப்பவை இருக்கப் போகின்றன. இம் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் தேதிகளில் நான் பிளாரிடாவுக்குச் செல்கிறேன்; இல்லை, ஜனவரி எட்டாம், ஒன்பதாம், பத்தாம் தேதிகளில் நான் ஜார்ஜியாவிலுள்ள டிப்டனுக்குச் செல்கிறேன். ஜனவரி என்பதற்குப் பதிலாக இம்மாதம் என்று கூறிவிட்டேன். அதன் பிறகு நான் கென்டக்கியிலுள்ள கிளாஸ்கோவுக்குச் செல்ல வேண்டும்; ஒரு வேளை கெண்டக்கியிலுள்ள காம்ப்பெல்ஸ் வில்லுக்கும். சகோ. ரோஜர்ஸ் ஒரு இரவு அவருடைய இடத்துக்கு வரும்படி என்னை அழைத்திருக்கிறார். கடந்த முறை அவரிடம் செல்ல முடிய வில்லை. 14.இப்பொழுது, சகோ. ரோஜர்ஸக்காக ஜெபியுங்கள். இன்றிரவு நாங்கள் ஐக்கியம் கொண்டிருந்தோம். அவருடைய கையை நான் பிடித்த போது, அவருடைய உடல் நிலை மோசமாயுள்ளதை அறிந்து கொண்டேன். எனவே இங்குள்ள சகோ. ரோஜரஸகக்காக ஜெபியுங்கள். அவர் தனது கரங்களில் பெரிய உத்திரவாதத்தை எடுத்துக் கொண்டுள்ளார். அது அவருக்கு பயத்தையும் சோர்வையும் அளித்துள்ளது. அவருடைய உடல் நிலை தற்பொழுது மோசமாயுள்ளது. அவருடைய மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை. எனவே அந்த தம்பதிகளுக்காக ஜெபியுங்கள். அவர்கள் அருமையான தேவனுடைய பிள்ளைகள். கர்த்தருக்கு சித்தமானால், அவருக்கு ஒரு இரவை ஒதுக்குவேன் என்று அவருக்கு வாக்கு கொடுத்தேன். 15.சகோ. ரட்டல்... 62ம் நெடுஞ்சாலையிலுள்ள நம்முடைய சிறு கூட்டாளி சபை. நாணமுள்ள இளைஞன்,அவர் இங்கு வந்து என்னை ஏரிட்டும் கூட பார்க்கமாட்டார். அவர் வீட்டுக்கு வருவார். ஓ, அவர் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதாக மக்கள் எண்ணினர். ஆனால் அந்த இளைஞனில் உண்மையான ஏதோ ஒன்று இருந்தது. நான் அவருடன் மீண்டும் மீண்டும் தங்கியிருந்து, ''சகோ. ரட்டல், உங்களால் முடியும்.'' என்று கூறிக் கொண்டே வந்தேன். அவர், ''சகோ. பிரன்ஹாமே, ஜனக்கூட்டத்துக்கு முன்பாக எழுந்து நின்றால், என் இருதயம் தொண்டைக்கு வந்து அதை அடைத்து விடுகிறது, என்னால்ஒரு வார்த்தையும் கூட பேசமுடிவதில்லை'' என்றார். நான், அங்கு நின்று கொண்டு அதை மறுபடியும் விழுங்கி விட்டு, கர்த்தருடைய நாமத்தினால் பேசுங்கள்'' என்றேன். இப்பொழுது அவருக்கு நெடுஞ்சாலையில் இந்த கூடாரத்தின் அளவில் ஒரு கூடாரம் உள்ளது. அவர் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டு அதில் நிலைத்து வருகிறார். அந்த இளைஞனுக்கு தேவனுடைய அழைப்பு இருந்தது. அவருடைய தந்தை மற்றும் தாயை எனக்குத் தெரியும், அவர்கள் மிகவும் அருமையானவர்கள். 16.அதன் பிறகு நாங்கள் ஒரு இரவு நியூ ஆல் பனியில் ஜூனியுடன் இருக்கவேண்டும். ஓ, உங்களுக்குத் தெரியும், ஒரு இரவு இங்கும் ஒரு இரவு அங்குமாக சிறுசிறு கூட்டங்கள். எல்லாமே திட்டப்படி நடக்குமானால், நான் ஜனவரி 25ம் தேதியளவில், முழு சுவிசேஷ கிறிஸ்தவ வர்த்தகர் நடத்தும் அகில உலக கன்வென்ஷனுக்காக மியாமிக்குச் செல்வேன். அங்கிருந்து கிங்ஸ்டன் ஹாய்டிக்கு, சென்று தென் அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ வரையிலும். அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்கு. ஆப்பிரிக்காவிலிருந்து - ஸ்காண்டினேவியாவுக்கு. இப்படியாக பல இடங்களுக்கு. இவ்வாண்டின் பெரும்பகுதி வெளிநாட்டில் நடக்கும் கூட்டங்களுக்கே செலவிடப்படும். எனவே எனக்காக ஜெபியுங்கள், நான் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். 17.அது கர்த்தருடைய சித்தமாக இருந்தால் மட்டுமே; இல்லையெனில்,நான் எந்த இடத்திற்கும் செல்ல சித்தமாயிருக்கிறேன். அது எங்கிருந்தாலும் பரவாயில்லை, நான் போவேன். தேவன் என்னை இந்த மண்ணான சரீரத்துக்குள் வைத்திருக்கும் வரைக்கும், மரணம் என்னை இந்த இடத்திலிருந்து கொண்டு போகும் வரைக்கும், நான் அவருடைய ஆராய்ந்து அறிய முடியாத ஐசுவரியத்தைக் குறித்து பிரசங்கிப்பேன். தேவனுடைய கிருபை யினால், அவர் எனக்கு உதவி செய்வாரானால், அதுவே எனது தீர்மானமாயுள்ளது. அவர் தமது கரத்தை என்னை விட்டு நீக்கி விடுவாரானால், பிசாசு என்னைக் கொன்று போடுவான். எனவே தேவன் தமது இரக்கமுள்ள கரத்தை என் மீது வைத்திருக்க வேண்டுமென்று ஜெபியுங்கள். அவருடைய நீதியை (justice) நான் கேட்கவில்லை; அவருடைய இரக்கத்தையே கேட்கிறேன். பாருங்கள்? அவருடைய நீதியையல்ல, அதற்கு முன்னால் நான் நிற்க முடியாது. அவருடைய இரக்கத்தையே கெஞ்சுகிறேன். ஏனெனில் நான் தகுதியற்றவன் என்பதை அறிந்திருக்கிறேன், யாருமே தகுதியுள்ளவர் அல்ல. அவருடைய நீதியை நாம் கேட்காமலிருப்பது நலம். அவருடைய இரக்கமே நமக்கு வேண்டும். 18.இன்றிரவு என் தொண்டை சிறிது கரகரப்பாயிருந்த போதிலும், இந்த அருமையான கிறிஸ்தவர் கூட்டத்தினிடம் பேசும் வாய்ப்பை என்னால் நிராகரிக்க முடியவில்லை. பொறுங்கள், இந்த அறிவிப்பை நான் செய்வதற்கு முன்பு, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் ஒரே இருதயத்தோடும் ஒரு மனதோடும் இருந்து, எல்லாமே இனிமையாய் போய்க் கொண்டி ருக்கையில், என் இரண்டு நிமிடம் பேச்சை சபைக்கு அளிக்க விரும்புகிறேன், பாருங்கள். 19.கவனித்துக் கேளுங்கள், சுவிசேஷத்தில் என் அன்புக்குரியவர்களே, என்... எனக்கு ஒரு கிரீடம் இருக்குமானால், என் கிரீடத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களே, இயேசுவின் இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்களே, நான்இவ்விதம் திரும்பி வந்தது ஒரு நோக்கத்துக்காகவே. வேட்டை பயணம் மேற்கொண்ட சகோ.ராய் ராபர்ஸனும், சகோ. பாங்க்ஸ் உட்டும், நானும், நாங்கள் திரும்பி வருவதென்று முடிவு செய்தோம். சகோ. ராய் மற்றும் நாங்கள் அனைவரும்,எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் நின்று கொண்டு மேய்ப்பனின் ஊழியம் மற்றும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் நமது மேய்ப்பன் சகோ. நெவிலைக்குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அவரை நாம் நேசிக்கிறோம்; இருப்பினும் சகோ. நெவில், உடன் மேய்ப்பர் என்னும் காரணத்தால், அவருக்கு அந்த ஊழியத்தில் தன்னை உந்திக்கொள்ள சிறிது கடினமாயுள்ளது போல் தோன்றினது. எனவே நாங்கள் ஜெபித்தோம். இதை நான் செய்வது கர்த்தருடைய சித்தம் என்பது போல் தோன்றினது. எனக்குதவி செய்தால், என்னால் முடிந்த வரையில் அதை சிறப்பாக செய்வேன் என்று கர்த்தரிடத்தில் விண்ணப்பித்தேன். 20.என் சொந்த பிரதிஷ்டையை நான் செய்து விட்டு, சபையும் இப்பொழுது அவ்விதம் செய்யும்படி செய்துவிட்டு; தேவன் கடந்த சில கூட்டங்களில் அந்த சிறு பிரதிஷ்டையின் காரணமாக நம்மை அவ்விதம் ஆசீர்வதித்தாரெனில், அந்த பிரதிஷ்டையில் நாம் தொடர்ந்து இருந்தால் அவர் எவ்வளவாக நம்மை ஆசீர்வதிப்பார், பாருங்கள்? அதில் தொடர்ந்து நிலைத்திருங்கள். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள். இன்று காலையில் நீங்கள் எவ்வாறு உட்பாதையில் நின்று கொண்டு உங்கள் கரங்களை தேவனிடத்தில் உயர்த்தி அழுது கொண்டிருந்தீர்கள் என்பதை நான் கண்டேன். அந்த அழகான ஆவி உங்கள் மேல் சுற்றிலும் அசைவாடிக் கொண்டிருந்தது. பிசாசு கூற முற்படுகின்ற எந்த ஒரு தீய காரியத்துக்கும் செவிகொடுக்காதீர்கள். பாருங்கள்? பிசாசு ஏதாவதொன்றைக் காண்பித்து, அல்லது தீதான எதையாவது, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர் ஒருவரைக் குறித்து உங்களிடம் கூறினால்,அதை விசுவாசிக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் அதை விசுவாசிக்கத் தொடங்கின உடனே, உங்கள் அனுபவத்தை கெடுத்துக் கொள்கிறீர்கள். 21.கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினரில் ஒருவர் தீதான ஒன்றை செய்வதை நீங்கள் கண்டால், அதை யாரிடமும் சொல்லாதீர்கள். அந்த அங்கத்தினரிடம் சென்று, அவரை மீண்டும் கிறிஸ்துவினிடம் கொண்டு வர முடியுமா என்று பாருங்கள். உங்களால் செய்ய முடியாமல் போனால், ஒரே ஒரு நபரிடம் கூறுங்கள், அல்லது அவரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். வேதம் கூறியுள்ள விதமாக அதைச் செய்யுங்கள். பாருங்கள்? யாராகிலும் ஒருவர், ''சகோதரி இன்னார் அல்லது சகோதரன் இன்னார் என்பாரானால் அவர் கூறின ஒரு வார்த்தையும் கூட நம்பாதீர்கள். அது போகும்படி விட்டு விடுங்கள். ஏனெனில் அது உங்களை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி செய்யும் பிசாசு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் உள்ளே வருவதை கவனியுங்கள், ஏனெனில் அவன் வருவான். நீங்கள் வீட்டின் எஜமான், விசுவாசம், அங்கு நின்று கொண்டிருக்கும்படி விட்டு விடுங்கள். அவன் கூறும் ஏதொன்றையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இந்த ஜனங்கள் உங்களுடன் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களைச் சுற்றி ஒன்றாக ஐக்கியங் கொண்டு, மேசையின் அருகில் இராப்போஜனத்தில் பங்கு கொள்கின்றனர். பரிசுத்த ஆவியும் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு சாட்சியாயிருக்கிறார். எனவே நாம் மிகவும் இனிமையாயும், தயவுள்ள இருதயம் கொண்டவர்களாயும்,மன்னிக்கிறவர்களாயும், அன்புள்ளவர்களாயும் இருப்போமாக. மற்ற நபர் உங்களுக்கு விரோதமாக தீதானவைகளைப் பேசினால், நீங்கள் அவரைக் குறித்து இனிமையான வைகளைப் பேசுங்கள். அப்பொழுது உங்களிடம் இன்னும் எவ்வளவு அதிகமான இனிமை வருகிறதை கவனியுங்கள். பாருங்கள்? அது உண்மை . தீமைக்கு நன்மை செய்யுங்கள், பகைக்கு அன்பை செலுத்துங்கள். 22.இனியவளே, இப்பொழுது நன்றாயிருக்கிறாயா? பின்னாலுள்ள அந்த சிறுமி. அது நல்லது. நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் பின்னால் சென்றேன். அவள் ஒரு கட்டியினால் அவதியுற்று கிடந்திருந்தாள், கர்த்தராகிய இயேசு அவளை இங்கு கொண்டு வந்து இந்த கூட்டத்துக்கு முன்பாக அவளை ஒப்புவித்தார். அதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆகையால் தான் சில நிமிடங்களுக்கு முன்பு நான் பிரசங்க பீடத்தை விட்டுச் சென்றேன். அவர்கள் திரும்பத் திரும்ப ஜெபித்த போதும், அவளை கர்த்தரண்டையில் கொண்டு வர முடியவில்லையென்று கூறினார்கள். அதை செய்ய நிச்சயமுடையவர்களாயிருங்கள். ''தேவனே, உமது கிருபையினால் அதை தான் நான் செய்வேன் என்று தேவனிடம் உங்களை பிரதிஷ்ட்டை செய்யுங்கள். யார் தீதானவைகளைக் கூறினாலும் பரவாயில்லை; நீங்கள் நன்மையையே திரும்பச் செய்யுங்கள். நீங்கள் பொல்லாதவைகளை எண்ணாதீர்கள். நீங்கள் அவ்விதம் எண்ணினால், நீங்கள் மாய்மாலமாக அதைக் கூறுகின்றீர்கள், அப்படியானால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். அந்த நபரிடம் உங்களுக்கு உண்மையில் நல்லுணர்வு தோன்றும் வரைக்கும், உங்களை நீங்கள் தேவனிடம் பிரதிஷ்டை செய்துக் கொண்டேயிருங்கள். அவ்விதம் தான் அதை செய்ய வேண்டும். அப்பொழுது தேவனுடைய ஆசீர்வாதங்களின் இனிமை,ஓ, உங்கள் ஆத்துமாவை மூடிக்கொள்ளும். அந்த விதமாகத்தான் நீங்கள் வெற்றியுடன் வாழ முடியும். நீங்கள் அன்பில் நிலைத்திருக்கும் வரைக்கும், எதுவுமே உங்களுக்கு கேடு இழைக்காது. நல்லது, நீங்கள் கூறலாம் 23.பாருங்கள், உங்களுக்கு அந்நிய பாஷைகள் இருந்தால், அவை ஓய்ந்து போம். உங்களுக்கு ஞானம் இருந்தால், அது ஒழிந்து போம். தீர்க்கதரிசனங்கள், தவறாகிவிடும். ஆனால் உங்களுக்கு அன்பு இருக்குமானால், அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். '' பாருங்கள்? உங்களை சிநேகிக்கிறவர்களை மாத்திரம் சிநேகிக்காதீர்கள், உங்களை சிநேகிக்காதவர்களையும் சிநேகியுங்கள். என்னை சிநேகிக்கிற எவரையும் சிநேகிப்பது எளிது. ஆனால் உங்களை சிநேகிக்காத ஒருவரை சிநேகிக்க முயற்சி செய்யுங்கள். அங்கு தான்நீங்கள் கிறிஸ்தவரா இல்லையா என்று உங்களை சோதித்துக்கொள்ள முடியும் - அதாவது உங்களை சிநேகிக்காத ஒருவரின் மீது உங்கள் இருதயத்தில் அவர் மேல் சிநேகம் கொண்டிருந்தால், அதை நீங்கள் செய்யாமல் போனால், தேவனைப்பற்றிக் கொண்டேயிருங்கள். அது அங்குள்ளது, அது உண்மையென்று எனக்குத் தெரியும். ஆமென். அது உண்மையென்று எனக்குத் தெரியும். 24.இப்பொழுது நாம் விலையேறப்பெற்ற வேதாகமத்தை, ஒரு சிறு செய்திக்காக எபிரெயர் நிருபம் 11ம் அதிகாரத்துக்குத் திருப்பப் போகிறோம். தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது.இன்று பிற்பகல் சகோதரர்களுடனும் சகோதரிகளுடனும் எனக்கு அருமையான தருணம் உண்டாயிருந்தது. ஆறு மணி வரைக்கும் நான் திரும்ப வரவில்லை. நான் படுக்கை அறைக்குள் ஓடி, அங்கு படுக்கையின் அருகில் முழங்கால்படியிட்டு, சில நிமிடங்கள் ஜெபித்து விட்டு, எழுந்திருந்து, வேதத்தைக் கையிலெடுத்து அதை படிக்கத் தொடங்கினேன். அங்கு ஒரு பத்திரிகை இருப்பதைக் கண்டேன். அதைக் கையிலெடுத்தேன், அது ஆப்ரிகான்ஸ் மொழியில் எழுதப் பட்டிருந்தது. என்னால் அதை படிக்க முடியவில்லை. சில நேரங்களில், நீங்கள் படிக்கும் பொழுது, ஒரு வார்த்தை உங்கள் கவனத்தைக் கவர்கின்றது,அது உங்களுக்கு உயிரடைகின்றது. அந்த விதமாகத்தான் ஒரு ஊழியக்காரன் தன் செய்தியைப் பெறுகிறான். வேதத்தைப் படித்துக் கொண்டேயிருக்கும் போது, முதலாவதாக ஏதோ ஒன்று உங்கள் கவனத்தைக் கவர்கின்றது. அந்த ஒன்றுடன் வேறொன்று சேர்கிறது, அந்த வேறொன்றுடன் மற்றொன்று சேர்கின்றது. அதை நீங்கள் கோடிட்டு, பிரசங்க பீடத்துக்குச் சென்று அதை படிக்கிறீர்கள். தேவன் மற்றவைகளைச் செய்கிறார். பாருங்கள், அவர் மற்றவைகளை பார்த்துக் கொள்கிறார். சில நேரங்களில் நீங்கள் அதில் லயித்துப் போய், உங்கள் சிந்தனையில் எழுபவைகளை குறிப்பு எழுதிக் கொள்கிறீர்கள். சில நேரங்களில் கூட்டத்தில் நீங்கள் விரைவாக மேடைக்கு வர வேண்டிய நிலைமை ஏற்படும் போது, நீங்கள் குறிப்பெழுதிக் கொண்ட அந்த சிறு கருத்துக்களை மறுபடியும் படிக்கிறீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு உயிர்ப்பித்துத் தருகிறார். அதை நான் பலமுறை செய்திருக்கிறேன். 25.இப்பொழுது எபிரெயர் 11ம் அதிகாரம், நாம் முதலாம் வசனம் தொடங்கி சில வசனங்களை வாசிப்போம்: விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாக வில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.* எபி. 11:1-3. இது அர்த்தம் நிறைந்ததாய் உள்ளதல்லவா? (சபையோர் ''ஆமென் என்கின்றனர் - ஆசி). நான் மீண்டும் 3ம் வசனத்தை படிக்கட்டும். கூர்ந்து கவனியுங்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (தேவனுடைய வார்த்தை ) விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலே அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான் (ஐந்நூறு வருட ஜீவியம்) விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளான தென்று தீர்த்து விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குத் தந்தரவாளியானான். 26.இப்பொழுது, சிறிது நேரம் ஜெபிப்போம், நாம் தலை வணங்குவோம். கர்த்தாவே, மிகவும் கிருபையுள்ள தேவனும் பிதாவுமாயிருக்கிறவரே, நாங்கள் மறுபடியும் ஸ்தோத்திரத்தோடு உமது சமுகத்தில் இப்பொழுது வருகிறோம். நாங்கள் ஜெபிப்பதற்கு தலை வணங்கியுள்ளதால் உமது சமுகத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று இப்பொழுது உணருவது மட்டுமல்லாமல், நாங்கள் எப்பொழுதுமே உமது சமுகத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறோம். ஏனெனில் ''கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. ''உமக்கு எல்லாம் தெரியும், நீர் இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கிறீர். எனவே, கர்த்தாவே, நாங்கள் தலை வணங்கியிருக்கும் காரணம் என்னவெனில், உமக்கு விரோதமாய் நாங்கள் செய்துள்ள பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னித்தருள வேண்டுமென்றும், உமது கிருபை மீண்டும் ஒரு முறை எங்களுக்கு அளிக்கப்பட்டு, பேசுவதற்கு எங்கள் உதடுகளையும், கேட்பதற்கு எங்கள் செவிகளையும் நீர் திறந்து இன்றிரவு உமது வார்த்தை எங்களுக்கு தத்ரூபமாக ஆக வேண்டும் என்று இந்த விண்ணப்பத்தை உம்மிடம் ஏறெடுக்கவே. நாங்கள் வாசிக்கும் படியாக தெரிந்து கொண்ட இந்த சில வசனங்கள் பூமியிலுள்ள காணக்கூடாத உமது சரீரத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் பேருதவியாய் இருப்பதாக. இது உமது ஆவிக்குரிய சபை, முதற்பேறானவர்களின் சபை, அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டு, கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, அந்த நாளில் கறைதிரையின்றி தேவனிடம் ஒப்புவிக்கப்படும். ஓ, இந்த தேவனுடைய நன்மையில், கர்த்தராகிய இயேசுவின் நீதியினாலும் இரக்கத்தினாலும், நாங்கள் பங்கு கொள்கிறவர்களாயிருக்கிறோம் என்னும் விசுவாசத்தை உடையவர்களாயிருப்பதனால் நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்! 27.எல்லா வியாதிகளையும் நீர் சுகமாக்கும்படி ஜெபிக்கிறோம். சிலநிமிடங்களுக்கு முன்பு அறையில் வலியுடன் படுத்துக்கிடந்திருந்த அந்த சிறுமியை நீர் தொட்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவள் சிறு பிள்ளைக்கேற்ற விசுவாசத்துடன், உம்மையும் உமது இரக்கத்தையும் ஏற்றுக் கொண்டவளாய் வெளியே நடந்து வந்ததைக் கண்டு, அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கென்டக்கியிலுள்ள சகோதரி பேக்கரின் அன்பார்ந்த சிறு பிள்ளையையும், சகோ. நெவில் குறிப்பிட்ட அவரையும் நீர் நினைவு கூர வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஓ,தேவனே, எங்கு பார்த்தாலும் வியாதியஸ்தர் திரளாய் உள்ளனர். விசேஷமாக கர்த்தாவே,இரட்சிக்கப்படாதவர்களும் உம்மை அறிந்திராதவர்களும் திரளாய் உள்ளனர்.அவர்கள் தங்கள் பாவங்களில் மரித்தால், உம்முடைய சமுகத்துக்கு அவர்களால் வரமுடியாத நிலையில் உள்ளனர். எங்களுக்கு சாட்சியும், வல்லமையும், உமது வார்த்தையை பேச தைரியத்தையும், அதை எப்பொழுது பேச வேண்டுமென்கிற ஞானத்தையும் அருளுமாறு ஜெபிக்கிறோம்.நாங்கள் போதுமான அளவுக்கு பேசின பின்பு அதை எங்களுக்கு தெரியப்படுத்தி, ஜனங்கள் மகத்தான பரிசுத்த ஆவியையும் அவருடைய கிரியைகளையும் குறித்து திகைப்படைந்து, வியக்கின்ற நிலையில் அவர்களை நாங்கள் விட்டுச் செல்லும்படி செய்வீராக. கர்த்தாவே, இதை அருளும். இப்பொழுது எங்களுக்கு செவி கொடுக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 28.'புலன்கள்' என்னும் பொருளின் பேரில் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.மாம்சத்தில் உள்ள மனிதனுக்கு ஐம்புலன்கள் உண்டென்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இந்த ஐம்புலன்கள் அவனுடைய ... அதாவது, அவன் பூமிக்குரிய வீட்டுடன் தொடர்பு கொள்ள தேவன் அவனுக்கு ஐம்புலன்களைத் தந்திருக்கிறார். இவை பார்த்தல், ருசித்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்று அழைக் கப்படுகின்றன. மாம்சத்திலுள்ள மனிதன் இவ்வைம்புலன்கள் உள்ளதை அறிந்திருக்கிறான், அவை நல்லவை. இந்த புலன்களில் ஒன்று சரியாக இயங்கத் தவறினால், நம்மால் சாதாரணமான வாழ்க்கை வாழ முடியாது. அவை இல்லாமல் நம்மால் சாதாரணமாக வாழ முடியாது.இந்த புலன் இயங்காமலிருக்கும் பட்சத்தில், ஏதோ ஒன்றை நாம் இழந்து விடுகிறோம், நம்மால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நமக்கு வாழ்க்கையின் ஒரு பாகம் கிடைக்காமல் போய் விடுகிறது. அவை நல்லவை, உபயோகமுள்ளவை. அவை தேவனால் நமக்கு அளிக்கப்பட்டவை. 29.தேவன் இந்த புலன்களை நமக்கு ஈவாக அளித்துள்ளார். அந்த புலன்களை நீங்கள் எதற்கு சமர்ப்பிக்கிறீர்களோ, அதைப் பொறுத்து உங்கள் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகிறது. நீங்கள்.... பார்ப்பது எதுவோ, அந்த புலன்கள் எவைகளுக்கு ஒப்புவிக்கப்படுகின்றனவோ, அவை உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துபவைகளாய் உள்ளன. இந்த ஐம்புலன்களை பெற்றுள்ளதற்காக நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். ஆனால் உங்களை வழி நடத்துவதற்கென்று அவை ஒருக்காலும் உங்களுக்குஅளிக்கப்படவில்லை. பூமியிலுள்ளவைகளுடன் தொடர்பு கொண்டிருக்கவே அவை உங்களுக்குஅளிக்கப்பட்டுள்ளன. ஆனால் உங்களுக்கு ஆறாம் புலன் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது,நீங்கள் கிறிஸ்தவராகும் வரைக்கும் இந்த ஆறாம் புலனை நீங்கள் பெற்றிருக்க முடியாது. அந்த ஒரு வகையில் மட்டுமே அந்த ஐந்து இயற்கை புலன்களை விட அதிகமானதை மாம்சத்திலுள்ள ஒருவன் பெற்றிருக்க முடியும். ஆறாம் புலன் கிறிஸ்தவனுக்கு விசுவாசம் என்னும் பெயரால் அறியப் படுகிறது. அதுதான் உங்களை ஆண்டு வழி நடத்துகிறது. அது மற்றெல்லாபுலன்களையும் விட சிறந்தது. மற்ற ஐம்புலன்களை விட இது மிகவும் சிறப்பானது. 30.நாம் ஆறாம் புலனைப் பெற்றுள்ளதால், அந்த ஐம்புலன்களினால் உபயோகமில்லை என்று நான் கூறமாட்டேன். ஆம், அவை அப்பொழுதும் உபயோகமுள்ளவையே. இந்த ஐம்புலன்களும் உங்களுக்கு தேவனால் அளிக்கப்பட்டவை. அவை உபயோகிக்கப்பட வேண்டியவை. ஆனால் இந்த ஐம்புலன்களும் தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அவை பொய்யுரைக் கின்றன. இப்பொழுது, ஆறாம் புலன் பொய்யுரையாது. அது ஒரு மேம்பட்ட புலன். அதைக் குறித்துதான் நான் பேச விரும்புகிறேன். இன்று காலை நான் ஒரு மேம்பட்ட அடையாளம் என்பதைக் குறித்து பேசினேன். இன்றிரவில் ஒரு மேம்பட்ட புலன் என்பதன் பேரில். 31.மேம்பட்ட புலன் பரிசுத்த ஆவி, உங்களில் வாசம் செய்யும் தேவனுடைய விசுவாசம். ஐந்து புலன்களையும் ஆறாம் புலனுக்கு கீழடங்க நீங்கள் விட்டுக் கொடுத்தால், அது உங்களை வழி நடத்தி, அந்த மேம்பட்ட புலன் மற்ற ஐந்து புலன்களையும் அதன் கட்டுக்குள் கொண்டு வந்து விடும். ஆவிக்குரிய மனிதன் மாம்சத்துக்குரிய மனிதனை விட உயர்ந்துள்ளது போல், இந்த மேம்பட்ட புலனும் மாம்ச பலன்களைக் காட்டிலும் உயர்ந்துள்ளது - வானம் உயரமாயுள்ளது போல், அது நீங்கள் காணக்கூடாத காரியங்களை விசுவாசிக்கும்படி செய்கிறது.ஐம்புலன்களும் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு நீங்கள் நடந்து கொள்ளும்படி அது செய்கிறது. பிசாசு இந்த ஐம்புலன்களுக்குள் நுழைந்து உங்களிடம் பொய் சொல்லமுடியும். ஆனால் அவனால் அந்த மேம்பட்ட புலனைத் தொடவே முடியாது. அது அவனுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. அது தேவனிடத்திலிருந்து வருகிறது. அது விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது. விசுவாசம் என்பது அந்த பெரிய காரியம். 32.ஐம்புலன்கள் ஆறாம் புலனைக் கட்டுபடுத்துவதில்லை. ஆனால் ஆறாம் புலன் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துகிறது. மேம்பட்ட புலன்இயற்கை புலன்களைக் கட்டுப்படுத்துகிறது. ஐம்புலன்கள் பார்த்தால், ருசித்தல்,உணருதல், முகர்தல், கேட்டல் என்பவையே. மேம்பட்ட புலன் நீங்கள் தேவனுடைய வார்த்தையைவிசுவாசிக்கும்படி செய்யும், ஏனெனில் அந்த ஒன்றைக் குறித்தே அது பேசும். அது நீங்கள் காணக்கூடாத,ருசிக்கக் கூடாத, உணரக் கூடாத, முகரக் கூடாத, கேட்கக் கூடாத காரியங்களை விசுவாசிக்கும்படி செய்யும். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை உங்களுக்குக் கொடுத்து, தேவனுடையவார்த்தையில் மட்டும் நடக்கவும், அதற்கு முரணாயிருப்பவைகளை விட்டு விலகியிருக்கவும் செய்யும். விசுவாசம் அவ்விதம் செய்யும். 33.புலன்களைக் குறித்து இந்த விவரத்தை அளிக்கிறேன். மாம்சத்திலுள்ள மனிதன் இந்த புலன்களுடன் பிறக்கிறான். எனவே இவை இயற்கையால் அவனுக்கு அளிக்கப்பட்டவை. அவனுடைய அறிவைக் கொண்டு அவன் சிந்திக்கையில், அந்த ஒரு காரியத்தைக் குறித்து மாத்திரமே அவன் அறிந்திருக்கிறான். அவனால் ஒரு மனிதனைப் போல் சிந்திக்க முடிகிறது, ஒரு மனிதனைப் போல் மட்டுமே பார்க்க முடிகிறது, ஒரு மனிதனைப் போல் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது, ஒரு மனிதனைப் போல் மட்டுமே கேட்க முடிகிறது. ஆனால் அவன் ஆட்கொள்ளப்படும் போது அல்லது மறு ஜென்மம் (regenerated) அடையும் போது, அதாவது நாம் மறுபடியும் பிறத்தல்' என்று அழைப்பதை அவன் பெறும்போது, அந்த ஆறாம் மேம்பட்ட புலன் அவனைப் பற்றிக் கொள்கிறது. அவ்விதம் செய்யும் போது, அவனால் கேட்க முடியாததை, அவனால் காண முடியாததை, அவனால் புரிந்து கொள்ள முடியாததை விசுவாசிக்கின்ற நிலைக்கு உயர்த்தி விடுகிது. அவன் என்னவானாலும் அதை விசுவாசிக்கிறான், ஏனெனில் அவன் அந்த ஆறாம் புலனாகிய மேம்பட்டபுலனால் ஆண்டு கொள்ளப்படுகிறான். ஓ, அதை அறிந்திருப்பதும், அதை விசுவாசிப்பது எவ்வளவு எளிதென்று சிந்தித்துப் பார்ப்பதும், எவ்வளவு அற்புதமாயுள்ளது. 34.நீங்கள் மறு ஜென்மம் அடையாமல் உங்களால் விசுவாசிக்க முடியாது. “பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாது'' என்று வேதம் உரைக்கிறது. அதை நாம் கடந்த வாரத்தில் பார்த்தோம்.அவ்விதம் நான் கூறுவதை முக்கியமாக பெந்தெகொஸ்தே விசுவாசிகள் கேட்கையில், அது அவர்களுக்கு இடறலாயுள்ளது. இயேசு யோவான் 5:24ல், என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு,'' என்று கூறியுள்ளார். நித்திய ஜீவன் தேவனிடத்திலிருந்து மட்டுமே வருகிறது. ''பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாது.'' வேறு யாரோ கூறினதை, ஒரு அறிவாளியின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டதை, இயற்கையான ஐம்புலன்களினால் நீங்கள் கற்றுக் கொண்டதை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் ஆறாம் புலன்,பரிசுத்த ஆவி, உள்ளே வரும் போது, அது இந்த ஐம்புலன்களின் யோசனைகள் அனைத்தையும் அகற்றி விட்டு, அந்த ஆறாம் புலனுக்குள் உங்களை உயர்த்தி, நீங்கள் காணவும், ருசிக்கவும்,உணரவும், முகரவும், கேட்கவும் கூடாதவைகளை விசுவாசிக்கும் படி செய்கிறது. அது உங்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. அப்பொழுது இயேசுவை கிறிஸ்து என்று உங்களால் கூற முடிகிறது,ஏனெனில் நீங்கள் அதை கண்டு கொண்டீர்கள்; மனித அறிவைச் சார்ந்த போதகத்தை உங்களுக்கு கற்பித்ததினால் அல்ல, ஆனால் உங்களுக்கு கிடைக்கப் பெற்ற அனுபவத்தின் மூலம். 35.''அதற்கும் ஆறாம் புலனுக்கும் என்ன சம்பந்தம். சகோ. பிரன்ஹாமே? ஆறாம் புலன் எதற்காக வருகிறது?'' ஆறாம் புலன் இந்த காரணத்துக்காக வருகிறது. ஆறாம் புலன் என்பது விசுவாசம், மேம்பட்ட புலன். இப்பொழுது ஆறாம் புலன் இந்த காரணத்துக்காகவே வருகிறது. அதாவது உங்களில் உள்ள ஐம்புலன்களும் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ளஎதையும் மறுப்பதற்காகவே. அதற்காகத்தான் ஆறாம் புலன் உள்ளது. “யோசனைகளைத் தள்ளி விடுதல் என்பதைக் குறித்து வேதம் உரைக்கிறது. பாருங்கள், ஐம்புலன்களைக் கொண்டு நீங்கள் யோசிக்க முடிகிறது. ''ஏன் இந்த மனிதன், ஏன்'' இது ..? என்றெல்லாம். ஆனால் ஆறாம் புலன் அதைக் காண்பதே இல்லை. அது அதற்கு மிகவும்அப்பாற்பட்டது. அது அதை விட மிகவும் உயர்ந்துள்ளதால், அதனுடன் எந்த யோசனையும் சம்பந்தப் பட்டதல்ல. ''நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். ''அதைக் குறித்து ஐம்புலன்கள் கூறும் எதற்கும் அது அப்பாற்பட்டது. இப்பொழுது சுகமளிக்கும் கூட்டத்துக்காக நாம் ஆயத்தமடைந்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? அதை நாம் விசுவாசிக்கிறோம்! நீங்கள் அந்த ஆறாம் புலனைக் கொண்டு நடக்கிறீர்கள், அந்தஆறாம் புலனைக் கொண்டு பேசுகிறீர்கள். அந்த ஆறாம் புலனைக் கொண்டு வாழ்கின்றீர்கள்.அந்த ஆறாம் புலனைக் கொண்டு மரிக்கிறீர்கள், அந்த ஆறாம் புலனைக் கொண்டு உயிரோடெழுந்திருக்கிறீர்கள். உங்களில் இருக்கும் அந்த மேம்பட்ட புலன், மாம்ச சிந்தையுள்ள மனிதனில் உள்ளதை விட வேறுபட்டது. 36.மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்கு ஐம்புலன்களே உள்ளன. அவை ஆறாம் புலனுக்கு கீழ் கொண்டு வரப்பட்டால் அவை நல்லவையே. மாம்ச சிந்தை தேவனுடைய வார்த்தையைப் படித்து விட்டு, ''அது தேவனுடைய வார்த்தை'' என்று சொல்லுமானால், அது உண்மையை உரைக்கிறது. ஆனால் அது அதைப் படித்து விட்டு, ''அது அனைத்தும் தேவனுடைய வார்த்தை ' என்று சொல்லுமானால், அது உண்மையை உரைக்கிறது. ஆனால் அது அதைப்படித்து விட்டு, ''அது அனைத்தும் தேவனுடைய வார்த்தை அல்ல'' என்றோ,அல்லது முன் காலத்துக்குரியது, இப்பொழுது அல்ல'' என்றோ கூறுமானால், அப்பொழுது ஆறாம் புலன் உள்ளே வந்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்கிறது. பாருங்கள், அது தான் வித்தியாசம். ஆகையால் தான் அநேகர் சுகமடைவதில்லை. அவர்கள் அறிவினால் விளைந்த கருத்துடன் வர முயல்கின்றனர். அவர்கள், ''நான் இதை செய்கிறேன், இதை விசுவாசிக்கிறேன்'' என்கின்றனர். ஆனால் ஆறாம் புலன் அதை கூறுமானால், அந்த ஆறாம் புலனை விட்டு அவர்களை எதுவுமே அசைக்க முடியாது. 37.தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எதையுமே மறுக்க வைப்பதற்கென்றே ஆறாம் புலன் மனிதனின் மேல் வந்துள்ளது. தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு விரோதமாய்க்காணப்படும் எந்த அறிகுறியையும், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனில் உள்ள ஆறாம் புலன் அது இல்லைவே இல்லை என்கின்றது. முதலாவதாக என்ன தெரியுமா, ஏதோ ஒரு நாத்தீகன், ஒரு அவிசுவாசி, கிறிஸ்தவனிடம் வந்து, “இங்கு பாருங்கள். பரிசுத்த ஆவி என்பது கிடையவே கிடையாது. நீங்கள் அவ்விஷயத்தில் தவறு செய்கின்றீர்கள். அதை நீங்கள் நம்புவீர்களானால், உங்களுக்கு பைத்தியம் தான் பிடித்துள்ளது. அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது'' என்கிறான். அப்பொழுது உடனே ஆறாம் புலன் கிரியை செய்யத் தொடங்குகிறது. 'நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை என்பதற்கு நான் வேதத்திலிருந்துஉங்களுக்குக் காண்பிக்கிறேன். சீஷர்கள் அதை எங்கு பெற்றுக் கொண்டனர் என்பதை என்னால் காண்பிக்க முடியும். ஆனால்...'' 'அப்படியா என்று நீங்கள் கேட்கிறீர்கள். அப்பொழுது ஆறாம் புலன் வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்'' என்று அதை உங்களுக்கு சுட்டிக் காட்டும். ''அந்த வாக்குத்தத்தம் உங்கள் பிள்ளைகளுக்கே, உங்களுக்கு அல்ல '' ஆனால் ஆறாம் புலன் அதைக் காட்டிலும் அதிகம் அறிந்துள்ளது. ஏன்? அது ஏற்கனவே, உங்களுக்குள் உள்ளது. அதை அவர்கள் உங்களிடம் சற்று தாமதித்து கூறிவிட்டனர். நீங்கள் ஏற்கனவே அதை பெற்றுக் கொண்டு விட்டீர்கள். 38.''பரிசுத்த ஆவி என்பது கிடையவே கிடையாது'' என்று போதிக்கும் மக்கள், அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறியாமலிருக்கின்றனர். ஒரு முறை ஒரு பையன் ஒரு ஆப்பிள் பழத்தின் தோலை ஒரு பேச்சுப் போட்டி கூட்டத்தில் வெட்டிக் கொண்டிருந்த போது, நாத்திகன் ஒருவன் அவனிடம், ''உனக்கு என்ன வேண்டும், அங்கு என்ன தேடுகிறாய்?'' என்று கேட்டது போல. அந்த பையன் அந்த நாத்தீகனிடம் “உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்''என்றான். அவன் ரசித்து அந்த ஆப்பிள் பழத்தை தின்று கொண்டிருந்த போது,குடிகாரனைப் போல் காணப்பட்ட ஒருவன், அவனுடைய தலைமயிர் முகத்தின் மேல் தொங்கிக் கொண்டு, ஒரு பல் வெளியே நீட்டிக் கொண்டு ஒரு பழைய அழுக்கான மேல் 'ஜாக்கெட்டைஅணிந்து கொண்டு அங்கிருந்தான். அந்த பையன் அவனிடம், ”உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்'' என்றான். அந்த நாத்தீகன் சற்று முன்பு, ''தேவன் ஒருவர் இல்லை. அது வெறும் உணர்ச்சி வசப்படுதலே, அது அர்த்தமற்றது'' என்று பேசினான். அந்த பையன் அவனிடம், ''மிஸ்டர், உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த ஆப்பிள் பழம் இனிக்கிறதா, புளிக்கிறதா?''என்றான். அந்த மனிதன், 'எனக்கு எப்படித் தெரியும்? அதை நான் தின்னவில்லையே'' என்றான். அந்த பையன், நான் அப்படித்தான் நினைத்தேன்,'' என்று சொல்லி அங்கிருந்து நடந்து விட்டான். 39.நீங்கள் கர்த்தரை ருசிக்காமல், உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் அவர் உண்மையில் இருக்கிறாரா இல்லையாவென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அது விசுவாசமும் வல்லமையும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்தது மாயிருக்கிற சந்தோஷத்தைக் குறித்து, ''நீங்கள் அதை ருசி பாராமல், உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆறாம் புலன் அதற்கு உங்களை வழி நடத்துகிறது. ஆறாம் புலன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறது. எந்த அறிவுத்திறனும் அதை உங்களிடம் கொண்டு வராது. அறிவுத்திறன் சிந்தனையை உபயோகித்து, ''அது மனோதத்துவம், அது இப்படிப்பட்ட ஏதோ ஒன்று, அது ஜனங்கள் உணர்ச்சி வசப்படுதல் என்று சொல்லும். ஆனால் ஆறாம் புலன் உள்ளே வரும்போது, அது அவையெல்லாவற்றையும் மறுதலித்து, ஒரு நபரை நேராக தேவனுடைய மார்புக்கு கொண்டு சென்றுவிடும். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.'' 40.விசுவாசத்தினாலே ஆபிரகாம்! விசுவாசத்தினாலே ஈசாக்கு! விசுவாசத்தினாலே யாக்கோபு ! எல்லாருமே விசுவாசத்தினாலே . அதைச் செய்வது ஆறாம் புலன். ஆறாம் புலன் எல்லா அறிகுறிகளையும், தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதையும், எந்த உணர்ச்சியையும் மறுக்கிறது. யாராகிலும் ஒருவர், ''ஓ, எனக்கு ஜெபிக்கப்பட்டது. ஆனால் நான் சுகமடைந்ததாக உணரவில்லை எனலாம். ஆறாம் புலன் அதைக் கேட்டு சும்மாயிருக்க முடியாது. அது, 'அது ஒருபொய். நான் முன்னை விட சுகமாயிருக்கிறேன். நான் சுகமடைந்து கொண்டிருக்கிறேன்.தேவன் அவ்வாறு உரைத் துள்ளார். அத்துடன் அது முடிவு பெற்று விடுகிறது. ஆமென்! தேவன் அவ்வாறு உரைத்துள்ளார்' என்று சொல்லும். ஆறாம் புலன் தேவனுடைய வார்த்தையினால் போஷிக்கப்படுகிறது. 41.அந்த மேம்பட்ட புலன், அது மேம்பட்டது. மற்ற புலன்களைக் காட்டிலும் மேலானது. அது மிகப் பெரிய புலன். அது விசுவாசம். அது உற்சாகமூட்டி செயலுக்கும் தரும் வல்லமை . ஆமென். உங்களால் செய்ய முடியாது என்று நீங்கள் எண்ணியிருந்த காரியங்களைச் செய்ய வைக்கும் ஒன்று. அது ஆறாம் புலன், மேம்பட்டபுலன். நீங்கள் ஜெபித்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு சூம்பினகை உள்ளதென்றும் அந்த கைக்காக நீங்கள் ஜெபித்துக் கொள்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.நீங்கள் மேலே வந்து தேவன் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்கள்.மேய்ப்பர் உங்களுக்காக ஜெபிக்கிறார், நீங்கள் திரும்பி சென்று விடுகிறீர்கள்.மாம்சத்துக்குரிய பழைய மனிதன், ''உன் கையில் எவ்வித வித்தியாசமும் காணவில்லையே, நீ முன்னை விட சுகமடைந்திருக்க வில்லையே,'' என்கிறான்.ஆனால் ஆறாம் புலனோ அங்கு வந்து, ''அது பொய். உனக்கு ஜெபம் செய்யப்பட்டு விட்டது. அத்துடன் அது முடிவுபெறுகிறது'' என்கிறது. 42.ஒரு முறை நம்முடைய கூட்டத்துக்கு வந்திருந்த அந்த ஸ்திரீயைப் போல அவள் கூட்டத்துக்கு வந்திருந்தாள், இருவர். அவர்கள் மேடையைக் கடந்தனர். அவர்கள் சிந்தனையைப் பகுத்தறிதலைக் கண்டனர். அந்த ஸ்திரீகள் ஸ்தம்பித்துப் போயினர். அவர்கள் இருவரும் உண்மையான கிறிஸ்தவர்கள். அவர்களில் ஒருத்தி மேலே வந்தாள். ஆவியானவர், 'நீ வயிற்றுக் கோளாறினால் அவதியுறுகிறாய்,'' என்றார். அவளுடைய முகம் பிரகாசமடைந்தது. அவள் அது உண்மை '' என்றாள். பரிசுத்த ஆவியானவர் என் மூலம், ''அதுகுடல் புண். அது நரம்பு சம்பந்தமான நிலையில் உண்டானது. ஒரு குறிப்பிட்ட மருத்துவர் உன்னைப் பரிசோதனை செய்தார். அவர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது .... அறுவைசிகிச்சை செய்து அது வெட்டப்பட்ட வேண்டும் என்று கூறிவிட்டார்'' என்றார். அவள், “ஒவ்வொரு வார்த்தையும் உண்மை '' என்றாள். அவள் ஒரு நல்ல விசுவாசி என்பதைக் கண்டு அவர் உன் பெயர் செல்வி இன்னார் இன்னார், நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய்'' என்றார். அவள், அது முற்றிலும் உண்மை '' என்றாள். அது என்ன? ஆறாம் புலன் அதை கிரகித்துக் கொள்கிறது. ஆறாம் புலனும், பரிசுத்தஆவியும் பக்கத்து பக்கத்தில் நின்று கொண்டிருந்தன. பரிசுத்த ஆவி பேசுகையில்,அதற்கு ஆறாம் புலன் “ஆமென்” என்கின்றது. பார்த்தீர்களா? ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும். 43.இயேசுவை சந்திக்க மார்த்தாள் புறப்பட்டு ஓடி, அவரை சந்தித்த போது, ''ஆண்டவரே!'' என்றாள். ஆறாம் புலனைக் கவனியுங்கள். 'ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்''.அங்கேதான் ஆறாம் புலன். இயேசு தம்மை ஒன்றாக இழுத்துக் கொண்டு, நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?'' என்றார். யோசிக்கும் தன்மையே, நீ என்ன சொல்லப் போகிறாய்? அங்கு ஒரு மனிதன் மரித்து கிடத்தப்பட்டிருக்கிறான், புழுக்கள் அவனுடைய உடலில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. 44.அவர் அப்பொழுது தான் தாம் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருப்பதாக சொல்லி முடித்தார். அது தேவனுடைய வார்த்தை . அந்த ஆறாம் புலன், மருத்துவரின் கவனத்துக்கும், விஞ்ஞான ஆராய்ச்சியின் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டதாய், எல்லா யோசனையும் எதிர்த்து அவைகளைப் புறம்பே தள்ளிவிடுகிறது. ஏன்? அது தேவனுடைய வார்த்தையைக் குறித்து சாட்சி பகருகின்றது. ''நான் இருக்கிறேன். ''நான் இருப்பேன், நான் இருந்தேன்'' என்றல்ல. நான் இப்பொழுது இருக்கிறேன்!'' நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்'', ஒரு மனிதன் ''என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?'' அவள், “ஆம், ஆண்டவரே'' என்றாள் - அந்த ஆறாம் புலன் - ''நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்''என்றாள். ''உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான். ''ஓ,என்னே! 45.அவர்கள் கல்லறைக்குச் சென்றனர். அந்த இரண்டும் ஒன்றாக இருக்கும் போது, ஏதாவதொன்று நடந்தாக வேண்டும். அது மேம்பட்ட புலனும் தேவன் அங்கு பிரசன்னமாய் நின்றிருத்தலும். அப்பொழுது ஏதாவதொன்று நடந்தாக வேண்டும். அந்த புலன் மேம்பட்ட புலன், அது தேவனாயிருந்தது. ஏதோ ஒன்று மார்த்தாளிடம் அதைச் சொல்லிற்று. அவள் அவரைக் கண்டிருந்தாள். அவள் அவரை அறிந்திருந்தாள். அவள் அவரை மேசியாவாக அடையாளம் கண்டு கொண்டிருந்தாள். அவள் அறிந்திருந்தாள், அவள் மட்டும் அவரை அணுகி, அவரிடம் நெருங்கி, அவளுடைய விஷயத்தை அவருக்கு முன்பாக வைத்து, ஒரு வாக்குத்தத்தம் அவரிடமிருந்து வருமானால் அவ்வளவுதான் அவளுக்கு வேண்டியது. அவர்,“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,'' என்று கூறினபோது, அவள் கேட்க விரும்பினது அவளுக்கு வேண்டியது அவ்வளவு மட்டுமே. ஏனெனில் ஆறாம் புலன், மேம்பட்ட புலன், அவளுடைய விசுவாசம், அவரை அறிக்கை செய்ய, அவரை விசுவாசிக்க அவளைத் தூண்டியது. 46.அந்த ஸ்திரீ மேடையிலிருந்து சென்ற போது, ''கர்த்தர் உரைக்கிறதாவது, வீடு சென்று சாப்பிடு. இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார்“, என்பதைப் பெற்றுச் சென்றாள். அவள் வீடு சென்றாள். அன்றிரவு அவளுடைய வட்டாரத்தில் வாழும் அவளுடைய சிநேகிதி, அவளுக்குப் பின்னால், வரிசையில் மூன்று அல்லது நான்கு பேர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு கழுத்தில் ஒரு பெரிய கட்டி இருந்தது. இதோ அவள் வந்தாள்.அவளுக்கு பக்கத்து வீட்டில் வாழும் அந்த ஸ்திரீக்கு அதிகம் தொல்லை விளைவித்துக் கொண்டிருந்த அந்த குடல் புண்ணிலிருந்து அவள் சொஸ்தமாகப் போகிறதைக் குறித்து இவள் மிகவும் மெய் சிலிர்ப்பு கொண்டிருந்தாள். இது நூற்றுக்கணக்கான 'கேஸ்களில் ஒன்று - ஆயிரக்கணக்கானவைகளில். அந்த பெரிய கட்டி அவளுடைய கழுத்தில் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் வந்தாள். நான் அவளிடம், ''இதை யாருமே சிந்தனையைப் பகுத்தறிந்து கூற வேண்டியது அவசியமில்லை. ஆனால் நீ ஏதோ ஒன்றைக்குறித்து மகிழ்ச்சி கொண்டவளாய் இருக்கிறாய், உனக்கு மெய் சிலிர்ப்பு உண்டாயிருக்கிறது, ஏனெனில் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்த ஸ்திரீ உன் அண்டை வீட்டுக்காரி“ என்றேன். 47.பரிசுத்த ஆவி! அவள், “இந்த மனிதனுக்கு அது எப்படித் தெரியும்? அதை ஏதோ ஒன்று அவருக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும்'' என்று மனதில் எண்ணினாள். எனவே அது அவளிடம் கூறப்பட்ட போது அது, “நீ உன் கழுத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறாய் என்றது. ''ஆம்.'' 'அது உன்னை விட்டுப் போய் விடும் என்று விசுவாசிக்கிறாயா?'' ''என் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன்'' என்றாள் அவள். நான், ''கர்த்தர் உரைக்கிறதாவது, வீட்டுக்குப் போ. நீ சுகத்தைப் பெற்றுக் கொள்வாய்,''என்றேன். மாம்ச சிந்தையுள்ள மனிதன் சுற்று முற்றும் பார்த்து, அவனால் ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. குடல் புண் உண்டாயிருந்த ஸ்திரீ வீடு சென்று புசிக்க முயன்றாள். எனவே, மரித்துப் போனால் நலம் என்பது போல் அவளுக்குத் தோன்றினது. ஓ , மாம்ச சிந்தையுள்ள மனிதன், மாம்ச புலன், அந்த உணர்வு, அங்கு குடல் புண் உள்ளது என்று இன்னும் அறிவித்துக் கொண்டிருந்தது. 48.எனவே ஓரிரண்டு வாரங்கள் கழிந்தன, அவள் சுற்றுவட்டாரத் திலிருந்த அனைவரிடமும் சபைக்கும் சென்று, ''கர்த்தர் என்னை சொஸ்தமாக்கிவிட்டார்' என்று சாட்சி கூறினாள். அவர்கள், ''உன்னால்இப்பொழுது உண்ண முடிகிறதா?'' என்று கேட்டனர். அவள், இல்லை, நான் விரும்பும் எல்லாவற்றையும் என்னால் புசிக்க முடிவதில்லை. ஆயினும் நான் ஏற்கனவே குணமடைந்து விட்டேன். அது என்னவாயிருந்த போதிலும், அவள் எப்படியும் குணமடைந்து விட்டாள். ஒரு நாள் காலை, அவளுடைய பிள்ளைகள் பள்ளிக் கூடத்துக்கு சென்று விட்டனர், அவளுக்கு அதிகம் பசியெடுத்தது. அவள் ஜன்னல் பக்கத்தில் நின்று கொண்டு பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். ஒரு ஆண்டு கழித்து அவள் கூட்டத்துக்கு, வேறொரு கூட்டத்துக்கு வந்திருந்தாள். அவள் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது, முதலாவதாக ஒரு வினோதமான உணர்ச்சி அவள் உடல் முழுவதும் பாய்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவள், 'இது என்ன? எனக்கு கூச்சலிட வேண்டும் போல் தோன்றுகிறதே' என்று நினைத்து கொண்டாள். 49.அவளுடைய கணவர் அவளிடம், ''தேனே, நீ சுகமடைந்ததாக கூறி வருகிறாய்'' - அவர் கிறிஸ்தவனாயிருந்த போதிலும். ''நீ நோக்கத்துக்கு நிந்தையைக் கொண்டு வருகிறாய்'' என்றார். அவருடைய வார்த்தையைக் குறித்து நீங்கள் சாட்சி சொல்லும்போது, நீங்கள் எப்படி நிந்தையை கொண்டு வர முடியும்? சாட்சி கூறாமல் போனால் தான், நீங்கள் நிந்தையைக் கொண்டு வருவீர்கள். அவர், ''நீ சுகமடைந்தாய் என்றால், நீ சுகமடைந்திருக்க வேண்டுமே என்றார். அவள், அந்த மனிதன் அங்கு நின்று கொண்டு என்னை உற்று நோக்கி, என் நிலையையும் நான் செய்த காரியங்களையும், நான் யாரென்றும், நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் கூறினார். அவர் மேடைக்கு வந்தபோது, நான் கட்டிடத்துக்குள் சென்று பதினைந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அப்படியிருக்க,இந்த மனிதனுக்கு இவையெல்லாம் எப்படித் தெரியும்? அவரை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை. அவர் என்னிடம், ''கர்த்தர் உரைக்கிறரதாவது நீ சொஸ்தமாகி விட்டாய்''என்றார். நான் சாகும் வரைக்கும் அதை எப்படியும் விசுவாசிப்பேன்“ என்றாள். எனவே அவளும்,கீழே தங்கியிருந்த அவளுடைய சிநேகிதியும் அவர்கள் அந்த விசுவாசத்தைப் பற்றிக் கொண்டிருப்பார்கள் என்று தேவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். 50.அன்று காலை, அவளுக்கு வினோதமான உணர்ச்சி ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குள் அவளுக்கு பசியுண்டாயிற்று. பிள்ளைகள் தட்டில், ஒரு சிறு கோப்பையில், சிறிது 'ஓட்ஸ்மிச்சம் வைத்து விட்டுப் போயிருந்தனர். அவள் ஓட்ஸ் புசித்தால் அவளுக்கு வயிறு எரியும் என்று அவள் கூறினாள். யாருக்காகிலும் குடல் புண் இருந்தால், அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே அவள் ஓட்ஸ் ஸைஸ் எடுத்து, இரண்டு வாய் புசித்தாள். அவள், “ஓ, என்னே இதன் பலனை இப்பொழுது அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் நான் குணமடைந்து விடுவேன்''என்று எண்ணினாளாம். ஆனால் அவள் இன்னும் பசியாயிருப்பதைக் கவனித்தாள்,எனவே கோப்பையில் இருந்த அனைத்தையும் அவள் தின்று முடித்து விட்டாள்.என்ன நடக்கப் போகிறதென்று அவள் சில நிமிடங்கள் காத்திருந்தாள். ஒன்றுமே நடக்கவில்லை; நல்லுணர்வு உண்டாயிருந்தது, அவளுக்கு இன்னும் பசித்தது. அவள் இரண்டு முட்டைகைளைப் பொறித்து, கோப்பையில் காப்பியை ஊற்றி, ரொட்டி 'டோஸ்ட் எடுத்துக் கொண்டு, மகிழ்ச்சியான நேரத்தை அனுபவித்தாள். அவளால் முடிந்தவரை தின்றாள். அவள் சென்று பாத்திரங்களைக் கழுவினாள். அரை மணி நேரம் கழித்து அவளுக்கு மீண்டும் பசித்தது. எந்த கோளாறும் ஏற்பட வில்லை. அவள் தொப்பியை அணிந்து கொண்டு, தெருவில் நடந்து இந்த அண்டை வீட்டுக்காரியின் வீட்டை அடைந்தாள். அவள் அங்கு அடைந்த போது,அந்த கூச்சலைக் கேட்டு குடும்பத்தில் ஒருக்கால் மரணம் நேர்ந்திருக்கும் என்று எண்ணினாள். அவர்கள் உரத்த சத்தமிட்டு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தனர். அந்த ஸ்திரீ தாமதமாய் உறங்கி, எழுந்தபோது, அவளுடைய கழுத்திலிருந்த கட்டியைத் தேடினாள், அது இரவில் மறைந்து விட்டது. அது என்ன? தேவன் கிரியை செய்தல். 51.இங்குள்ள காடில் கூடாரத்தில் (CADLE TABERNACLE) நாங்கள் அந்த கூட்டத்தை நடத்தின போது, கால் ஊனமுற்ற அந்த பையன் அங்கு வந்து, அவனுக்காக ஜெபிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த உங்களில் அநேகர் அவனைக் கண்டீர்கள். அவர்கள் அவனை பின்னால் உள்ள அந்த அவசர அறைக்கு கொண்டு வந்திருந்தனர். பில்லி என்னை அவனிடம் கொண்டு சென்றான். அவர்கள் அவனை மேடைக்கு மேல்... அந்த கட்டிடத்துக்கு இரண்டு மூன்று முறை கொண்டு வந்திருந்தனர். அவனுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை. எனவே அவனை அவசர அறையில் வைத்தனர். நான் அங்கு சென்று அவனுக்காக ஜெபித்து, அவனை உற்று நோக்கினேன். அவன், திரு. பிரன்ஹாமே, எனக்கு ஆறுதலாக ஏதாவது கூறுவீர்களா?'' என்று கேட்டான். நான், ''ஆம், ஐயா, மகனே, இளம்பிள்ளை வாதம் உன்னை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்றேன். அவன், “அது சரி'' என்றான். நான், 'உன் பெயர் இன்னின்னது. நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய்'' என்றேன். அவன், ''அது உண்மை . நான் சுகமடைவதைக் குறித்து என்ன?,'' என்றான். நான், ''அவருடைய தழும்புகளால் நீ குணமடைந்தாய்,'' என்றேன். அவன் வீடு சென்று, சாட்சி கொடுத்து, தேவனுக்கு துதியைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவன் நிந்தையைக் கொண்டு வந்ததாக சுற்று வட்டாரத்தில் எண்ணினர். முடிவில் ஒரு ஞாயிறன்று ஒருஊழியக்காரர் கூட்டம் அவனிடம் வந்து, அவனருகில் உட்கார்ந்து, அப்படி செய்வதை நீ நிறுத்த வேண்டும். நீ அந்த நோக்கத்துக்கு நிந்தையைக் கொண்டு வருகிறாய்,''என்றனர். 52.அந்த இளைஞன் அங்கு உட்கார்ந்து கொண்டு, “மிஸ்டர்,நான் இருக்கிற இடத்தில் நீங்கள் இருந்து, நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் நாற்காலியில் உட்கார்ந்திருக்க நேர்ந்தால், எனக்கு கிறிஸ்துவில் உள்ள கடைசி நம்பிக்கையை என்னிடமிருந்து பறிக்க நீங்கள் முயற்சி செய்யமாட்டீர்கள். அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்' என்றான்.அவன் அதைச் சொன்ன மாத்திரத்தில் ...... அவன் அங்கு கால்கள் வழங்காதவனாய், அவனுடைய கைகள், உடல், முதுகு எல்லாமே பாதிக்கப்பட்டு இருந்தன. அவன் அதைச் சொன்ன மாத்திரத்தில், நாற்காலியை விட்டு எழுந்திருந்து தேவனை மகிமைப்படுத்தினான். என்ன? அவனுடைய இயற்கை புலன்கள் அவன் அந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டிருப்பான் என்றன; மருத்துவர், அவன் வாழ்நாள் முழுவதும் அங்கு உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார்.ஆனால் அவனுடைய ஆறாம் புலனோ, ''அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்'' என்றது.அவன் செய்யும்படியான காரியம் வேறொன்றும் ... தேவன் உரைத்ததற்கு முரணாயிருந்த அனைத்தையும் அவன் புறம்பாக்கினான். அதற்காகத் தான் ஆறாம் புலன் அளிக்கப்பட்டுள்ளது. 53.வயோதிபனான ஜான் ரைன் என்னும் குருட்டு பிச்சைக்காரன் ஃபோர்ட்வேய்னில் இருந்தான். அன்றொரு நாள் அங்கு நாங்கள் சென்றிருந்த போது, கூட்டத்தில் அவனுக்கு ஜெபம் பண்ணப்பட்டது. அது பியானோ இசைப்பவர் யாருமே இல்லாமல் ''மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார்' என்னும் பாடலை பியானோ தானாகவே வாசித்த இரவுக்கு முந்தின இரவு. அவன் குருடனாயிருந்த போது, கத்தோலிக்க விசுவாசத்தைக் கொண்டிருந்தான். அவன் வரிசையில் வந்து எனக்கு முன்னால் நின்றான்.நான் அவனை உற்று நோக்கி, “உன் பெயர் இன்னின்னது, ஜான் ரைன்'' என்றேன். ''ஆம்.'' ''நீ மூலையில் பிச்சையெடுப்பவன். நீ அநேக ஆண்டுகளாக குருடாயிருக்கிறாய்.'' ''ஆம், அது உண்மை . ''நீ கத்தோலிக்க விசுவாசம் கொண்டிருக்கிறாய்.'' ''அது உண்மை .'' நான், ''கர்த்தர் உரைக்கிறதாவது, உன் சுகத்தைப் பெற்றுக் கொள்“ என்றேன். அவன், ''நன்றி, ஐயா,'' என்றான். நான், “கர்த்தருக்கு நன்றி செலுத்து,'' என்றேன். அவன், “என்னால் காண இயலவில்லை'' என்றான். நான், ''அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நீ குணமடைந்து விட்டாய்,'' என்றேன். அவன் அங்கிருந்து சென்றான். மேடையை விட்டு இறங்க அவர்கள் அவனுக்கு உதவி செய்தனர். மாம்ச சிந்தையுள்ள மனிதன் ஒன்றையும் காண முடியவில்லை. அதன் மூலம் ஏற்பட்ட விளைவை அவர்களால் காண முடியவில்லை. அவர்கள், ''அவன் முன்னைப் போலவே குருடாயிருக்கிறான்,'' என்றனர். 54.எனவே அவனுடைய நண்பர்களில் இருவர் அவனை மீண்டும் மேடைக்குக் கொண்டுவந்து ஜெபவரிசையில் நிறுத்தினர். அவன் வரிசையில் கடந்து வர ஹாவர்ட் அனுமதித்தார். அவன் என்னிடம் வந்தபோது, ''மிஸ்டர்,நான் சுகமடைந்து விட்டதாக என்னிடம் கூறினீர்களே,'' என்றான். “என்னை நம்புவதாக நீ கூறினாயே,'' என்றேன். அவன், “உம்மை நான் நம்புகிறேன். அதை நம்பாமலிருக்க காரணம் இல்லை. என்வாழ்க்கையில் நடந்த எல்லா காரியங்களையும் எனக்கு அறிவித்தீர். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னால் உள்ள ஒரு ஸ்திரீ, சில நிமிடங்களுக்கு முன்பாக அவளுக்கு ஒரு கட்டி இருந்ததாகவும், அது இப்பொழுது போய் விட்டதாகவும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறாள், '' என்றான். நான், என்னை நீ நம்புகிறாய் என்றால், பின்னை ஏன் என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய்? நான் தேவனுடைய வார்த்தையைத்தான் உன்னிடம் கூறுகிறேன்,'' என்றேன். அவன், ''நான் என்ன செய்ய வேண்டும், ஐயா?'' என்று கேட்டான். அவன் கத்தோலிக்கனானதால், அவன் பற்றிக் கொள்ள அவனுக்கு சரீரப்பிரகாரமாக ஏதாவதொன்று இருக்க வேண்டுமென்று நான் அறிந்தவனாய் அவனிடம், அவருடைய தழும்பு களால் குணமானேன்'' என்று சொல்லிக் கொண்டேயிருந்து, அவருக்குத் துதியை செலுத்து, '' என்றேன். 55.அந்த வயோதிபன் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தெரு முனையில் நின்று கொண்டு செய்தித் தாள்களை விற்றுக் கொண்டே “கூடுதலாக, கூடுதலாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் சுகமடைந்து விட்டேன் கூடுதலாக, கூடுதலாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் சுகமடைந்து விட்டேன் என்று கூச்சலிட்டான். அடுத்த நாள் இரவு அவன் மறுபடியும் கூட்டத்துக்கு வந்திருந்த போது,என்னால் பிரசங்கிக்கவே முடியவில்லை. அவன் எழுந்து நின்று,“எல்லாரும் அமைதியாயிருங்கள்! என்னைச் சுகமாக்கினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்று கூச்சலிட்டான். அவன் கத்தோலிக்கன் என்பதால், விசுவாசத்தை எவ்விதம் பற்றிக் கொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் இதை மீண்டும், மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டேயிருந்ததால், முடிவில் ஆறாம் புலன் கிரியை செய்யத் தொடங்கும் என்று அவன் அறிந்திருந்தான். அது உண்மை . ''என்னைச் சுகமாக்கினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' அவன் தெரு முனையில் நின்று கொண்டு, “என்னை சுகமாக்கினதற்காக ஸ்தோத்திரம் கூடுதலாக என்னை சுகமாக்கினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று உரக்க சத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவனைக் காணும் யாராகிலும், ''எப்படியிருக்கிறாய், ஜான்?'' என்று கேட்டால். ''என்னைச் சுகமாக்கினதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்பான். அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, கேலி செய்தனர். 56.செய்தித் தாள்கள் விற்கும் வேறொருவன், அவன் சவரம் செய்து கொள்வதற்காக அவனை சலூன் கடைக்கு கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். அது கூட்டத்துக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, சலூன்கடைக்காரர் அவனை நாற்காலியில் உட்கார வைத்து, அவனுடைய முகத்தில் சோப்பை நுரைக்கச் செய்து அவனிடம், “ஜான் நான் கேள்விப்பட்டேன்...'' தனக்கு அதிகம் தெரிவதாக எண்ணிக் கொண்டிருந்த ஏதோ ஒருவன், அவன் தெய்வீக சுகமளிப்பவரை நீ காணச் சென்றதாகக் கேள்விப்பட்டேன் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.), அங்கே'' என்றான். ஜான், “ஆம், நான் போயிருந்தேன்,'' என்றான். ''நீ சுகமடைந்து விட்டதாக கேள்விப்பட்டேனே,'' என்று அவனைக் கிண்டல் செய்தான். அப்பொழுது அந்த கிழவன், 'ஆம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என்னை சுகமாக்கினார்'' என்று சொன்ன மாத்திரத்தில் அவனுடைய கண்கள் திறந்தன. அவனுடைய கழுத்தில் துணி சுற்றப்பட்டவனாய் அவன் சலூனிலிருந்த நாற்காலியை விட்டு எழுந்து ஓடினான். சலூன்காரனும் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு அவனைப் பிடிக்க அவன் பின்னால் ஓடினான். அவர்கள் தெருவில் ஓடினர். ஏன்? தேவனுடையவார்த்தை அங்கு கிரியை செய்தது. 57.சிறு ஜார்ஜி கார்டர் அங்கு கிடத்தப்பட்டிருந்தாள்; உங்கள் எல்லோருக்கும் அது தெரியும், இங்குள்ள சிலர் நெருங்கினவர்கள், அவள் ஒன்பது ஆண்டு எட்டு மாதங்களாக அங்கு கிடந்திருந்தாள். அவளால் முடியவேயில்லை...அவளுக்கு அடியில் ரப்பர் விரிப்பை விரித்து, சிறுநீரகங்களிலிருந்தும் குடல்களிலிருந்தும் வெளி வந்தவைகளை அந்த விரிப்பை இழுத்து எடுத்தனர். அவளுடைய எடை முப்பத்தைந்து பவுண்டு மட்டுமே. அவள் இந்தியானா விலுள்ள மிலிடவுனில் கிடந்திருந்தாள். அவளுடைய ஜனங்கள் சேர்ந்திருந்த சபை ..... நான் மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் கூட்டம் நடத்தச் சென்றிருந்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவளுடைய சபை, 'சபையிலுள்ள எந்த அங்கத்தினராகிலும் அந்த மதவெறியன் நடத்தும் கூட்டத்துக்குச் சென்றால், அவர்களை நாங்கள் சபையிலிருந்து புறம்பாக்குவோம்,'' என்று கூறியிருந்தனர். அவளுடைய தந்தை அந்த சபையில் டீக்கனாக இருந்தார். அவள் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்' என்னும் தலைப்பு கொண்ட என் சிறு புத்தகத்தை பெற்றுக் கொண்டாள். ஒரு பிற்பகலில் சகோ. ஹால் என்னை அங்கு கொண்டு சென்றார். அவளுடைய தாய் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாள். அதனுடன் சம்பந்தம் கொள்ள அவளுக்குப் பிரியமில்லை. நான் உள்ளே சென்று அவளுக்காக ஜெபித்தேன். அவள், ”நல்லது ,நெல் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்ணைக் குறித்தென்ன?'' என்று கேட்டாள். அந்த தரிசனத்தைக் குறித்து அவளுக்குத் தெரிந்திருந்தது. நான், ''அது ஒரு தரிசனம், சகோதரியே, என்னால் ஜெபிக்க மட்டும் முடியும். நீ விசுவாசமுள்ளவளாயிரு,'' என்றேன். இந்த ஏழை பெண் அதற்கு விரோதமாக போதிக்கப்பட்டிருந்தாள். 58.அது நடந்து சில நாட்கள் கழித்து, அங்கு நான் நின்று கொண்டு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருந்த போது, அவள் அங்கு வந்திருந்தாள், அவள் அழுது கொண்டேயிருந்தாள். தேவன் அவளைக் சுகமாக்குவாரானால் அவள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வாள் என்று அவள் வாக்களித்திருந்தாள். அவள் துடைப்பக் குச்சி அளவுக்கு கால்களைக் கொண்டவளாய் அங்கு கிடத்தப்பட்ருந்தாள். அவளை 'பெட் பேனில்' (bed pan) தூக்கி உட்கார வைக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. அவளுடைய தாய் ஒரு வாலிப ஸ்திரீ . அவளுடைய மகள் அங்கு படுத்திருந்து அணு அணுவாய் சாவதை காணச் சகிக்க முடியாமல், அவளுக்கு திமிர்வாதம் பிடித்து, தலையும் நரைத்து விட்டது. பெண் சுரப்பிகளில் காச நோய் பிடித்து அவளுடைய உடல் முழுவதும் கூட பரவினது. அவளுடைய எடை முப்பத்தேழு பவுண்டு என்று அவர்கள் நிர்ணயித்தனர் என்று நினைக்கிறேன். அவளுக்கு அடியில் 'பெட்பேன்' வைக்க அவளைப் போதிய அளவுக்கு தூக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு ரப்பர் விரிப்பை அவளுக்கு விரித்தனர். ஒன்பது ஆண்டு எட்டு மாதங்களாக அவள் அங்கு கிடந்திருந்து, ஜன்னலுக்கு அருகிலிருந்த மரத்தை அவளுடைய தலையைத் தூக்கிக் காணவும் கூட முடியாதிருந்தது. 59.ஒரு நாள் நாள் ஜார்ஜ் ரைட்டின் வீட்டின் அருகிலுள்ள மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “எழுந்து நில், '' என்றார். நான் பார்த்த போது, ஒரு ஒளி டாக்வுட் (dogwood tree) வழியாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர், ''கார்டரின் வீட்டுக்குப் போ,'' என்றார். அங்கு நான் சென்ற போது, நான் அங்கு சென்றேன் என்பதற்கான ஒருஅடையாளத்தை கர்த்தராகிய இயேசு அவளுடைய தாய்க்கு காண்பித்திருந்தார். அந்த பெண் படுத்திருந்த படுக்கையினருகில் நடந்து சென்றேன். அவளால் எச்சில் துப்பும் கோப்பையை தூக்கவும் முடியாத அளவுக்கு அவ்வளவு பெலவீனப் பட்டிருந்தாள். அவளுடைய தாய் அதை அவளுக்குப் பிடித்துக் கொடுக்க, காசத்தினால் நிறைந்த கோழையை அவள் அதில் துப்பினாள். நான், சகோதரி ஜார்ஜி, அரை மணி நேரத்துக்கு முன்பு தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசு என்னை வனாந்திரத்தில் சந்தித்து, இங்கு வந்து உன் மேல் கைகளை வைக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். கர்த்தர் உரைக்கிறதாவது, எழுந்து நில்'' என்றேன். 60.ஆறாம் புலன் அப்பொழுது கிரியை செய்யத் தொடங்கினது. ஒரு வல்லமை அந்த பெண்ணைத் தாக்கியது. அப்பொழுது ஒன்பது ஆண்டு எட்டு மாதங்கள் கழித்து முதன் முறையாக அவள் குதித் தெழுந்து, முற்றத்துக்கு ஓடி, மரங்களையும் புல்லையும் மற்றவைகளையும் ஆசீர்வதித்து, உள்ளே சென்று பியானோவின் அருகில் உட்கார்ந்து கொண்டு, 'இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே'' என்னும் பாடலை வாசிக்கத் தொடங்கினாள். ஏன்? யோசனை அதை அகற்றி விட்டிருக்கும் .... அவளால் செய்ய முடியவேயில்லை. அவள் அதை எப்படி செய்தாள் என்று எனக்கு இப்பொழுது தெரியவில்லை. எனக்கு எப்பொழுதும் தெரியாது. அவளுடைய கால்கள் தொடையின் அருகில் அவ்வளவு பெரிதாக கூட இல்லை , துடைப்பக் குச்சிகளைப் போல் காணப்பட்டன.அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு, இல்லை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு. இன்றைக்கு அவள் திடகாத்திரமுள்ளவளாய், ஆரோக்கியமுள்ளவளாய் கர்த்தராகிய இயேசுவுக் காக வாழ்ந்து வருகிறாள். அது என்ன? முதலில், ஒன்றுமே நடப்பதாக தோன்றவில்லை. அது நடக்காது என்று யோசனை ஒருக்கால் கூறியிருக்கும். ஆனால் சகோதரனே, அவள் வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டாள். சாலேமிலிருந்த ஊனமுற்ற இந்த நேல் பெண்ணை, தேவன் சுகமாக்க முடியுமென்றால், அவளுக்கு திமிர்வாதம் பிடித்து, ஊனமுற்று அவளுடைய கைகள் இப்படித் தொங்கிக் கொண்டிருந்தன. தேவன் அந்த பெண்ணை சுகமாக்க முடியுமென்றால், அவளையும் சுகமாக்க முடியுமென்று அவள் விசுவாசித்தாள். 61.சகோ. ஹால் அங்கு கிடந்திருந்து புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்தார். என்னை அந்தப் பெண்ணிடம் கொண்டு சென்ற அதே மனிதன் மில்டவுனில் இருந்த அவருடைய மருத்துவர் இங்கு நியூ ஆல் பனியிலுள்ள செயின்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரிடம் அனுப்பினார். அவருடைய பெயர் எனக்கு மறந்துவிட்டது. அவர் என் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்; அருமையானவர், நல்ல மருத்துவர். அவர் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு, அது 'புற்றுநோய்'' என்றார். அவர் மில்டவுனிலிருந்த டாக்டர் ப்ரவுன் என்பவரிடம் ''அவர் மரித்துக் கொண்டிருக்கிறார்'' என்றார். டாக்டர் ப்ரவுன், ''நான்அப்படித்தான் நினைத்தேன்,'' என்றார். அவர்கள் அவரை இங்குள்ள அவருடைய சகோதரியின் வீட்டுக்கு கொண்டு சென்றார்கள். அவள் நகரத்தில் முன்னாள் நீதிபதியாயிருந்த திரு. காப் என்பவரின் உறவினர். அவர்கள் இங்கு அடைந்த போது, அவர் மரிக்கும் வரைக்கும் அவரை இங்கேயே வைத்திருங்கள்,'' என்றனர். 62.என்னை அங்கு வரும்படி அழைத்தனர். நான் என் மனைவியுடன் ஒவ்வொரு நாளும் அங்கு சென்று அவரைப் பார்த்தேன். நாங்கள் சகோ. ஹாலுக்காக ஜெபித்தோம். அவரை நான் நேசித்தேன். நான் கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்தினவர்களில் அவர் ஒருவர். அவருடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்து, அவரால் கைகளையும் அசைக்க முடியவில்லை. திருமதி.ஹால், பில்லி, உங்களால் ஒன்றும் செய்ய முடியாதா?'' என்று கேட்டாள். ''திருமதி.ஹால், என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. இதைக் குறித்து கர்த்தருடைய வார்த்தையை நான் கேட்கவில்லை. என் மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்யவிரும்புகிறார்,'' என்றேன். அவள், ''உங்கள் மருத்துவர் யார்?'' என்று கேட்டாள். நான், “டாக்டர் சாம் அடேய்ர், '' என்றேன். நான் சாமை தொலைபேசியில் கூப்பிட்டேன். அவர், 'பில்லி, என்னால் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். எக்ஸ்-ரே எடுக்கவும் இன்னும் மற்ற காரியங்களுக்காகவும் அவரை லூயி வில்லுக்கு அனுப்பலாம். நான் உங்களிடம் மருத்துவ 'ரிப்போர்ட்டை தருகிறேன்,'' என்றார். அவர்கள் நோயாளி ஊர்தியை அனுப்பி அவரைக் கொண்டு சென்று திரும்பவும் கொண்டு வந்தார்கள். 63.சாம் என்னை தொலைபேசியில் அழைத்து, 'பில்லி, அவருக்கு ஈரலில் புற்று நோய் உள்ளது. நாங்கள் ஈரலை அறுத்து எடுத்துவிட்டால், அவர் உயிர் வாழ முடியாது. அவர் ஒரு பிரசங்கி, அவர் போவதற்காக தன்னை இந்நேரம் ஆயத்தப்படுத்தியிருக்க வேண்டும். அவர் இவ்வுலகை விட்டு போய்க் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் அவரிடம் கூறி விடுவது நல்லது என்றார். நான், ''சாம், அவர் போக ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் காரியம் என்னவெனில், அவர் போவது எனக்கு வேதனையாயுள் ளது. அவர் என் சகோதரன். அவரை நான் நேசிக்கிறேன்,''என்றேன். நான், “ஓ, தேவனே,எனக்காக ஏதாவதொன்றைச் செய்யும்'' என்று எண்ணினேன். அன்று காலை நான் அணில் வேட்டைக்குப் புறப்பட்டேன். நான் காலை விடியும் முன்பு, வெளியே நோக்கினேன், முற்றத்தில் யாருமே இல்லை; என் துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அப்பொழுது கரடுமுரடாக தோற்றமளித்த ஒரு ஆப்பிள் பழம் சுவற்றில் தொங்கிக் கொண் டிருந்தது. நான், ''மேடா ஏன்அதை சுவற்றில் தொங்கவிட்டாள்?'' என்று எண்ணினேன். நான் பார்த்த போது, வேறொரு ஆப்பிள், வேறொரு ஆப்பிள், வேறொரு ஆப்பிள், அங்கு ஆறு ஆப்பிள் பழங்கள் தொங்கின. என் தொப்பியைக் கழற்றி விட்டு தரையில் முழங்கால்படியிட்டேன். அங்கு நான் பார்த்த போது, ஒருபெரிய அழகான ஆப்பிள் பழம் இறங்கி வந்து அந்த ஆப்பிள் பழங்கள் அனைத்தையும் தின்றுபோட்டது. நான் பார்த்த போது, அதே ஒளி (இங்கு இருக்கும் படத்தில் தொங்கிக் கொண்டு இருப்பது) அங்கு மேலே நின்று கொண்டு சுற்றி வந்தது. அவர் “ நீ காலூன்றி எழுந்து நில். நீ போய் திரு.ஹாலிடம், 'கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் மரிக்க மாட்டார், உயிர் வாழ்வார் என்று சொல்,'' என்றார். நான் சென்று அவரிடம் கூறினேன். அவருடைய உடல் நிலையில் வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும் அவர் விசுவாசித்தார்.அவர் அதைப் பற்றிக் கொண்டார். உடல் நிலையில் எந்த வித்தியாசமும் இல்லாதது போல் தோன்றினது. ஒரு நாள் கடந்து சென்றது. ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டாம் நாள்,ஒரு வித்தியாசமும் இல்லை. மூன்றாம் நாள், அதுவித்தியாசமாகத் தொடங்கினது. அநேக ஆண்டுகள் கழித்து அவர் இன்றைக்கு இதோ இங்கு உயிரோடிருக்கிறார். 64.இங்கு திருமதி வீவர் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். இல்லை,நான் தவறுதலாக கூறவில்லை. அவளுடைய மகள் என்னிடம் வந்தாள். இது மார்ஜிமார்கன் சுகமடைந்த பிறகு நடந்தது. அங்கு நான் சென்றேன். அந்த ஸ்திரீ செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. அவள் அடுத்த சில மணி நேரத்துக்குள் மரித்து விடுவாள்.அவர்கள் அவளுக்கு இரண்டு மூன்று ஊசி போட்டார்கள், அவ்வளவுதான். அவளுக்கு பெண் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, புற்றுநோய் அவளுடைய முதுகெலும் புக்குள் பரவி விட்டது. அவர்கள் அறுவை சிகிச்சை செய்த போது, அது பரவும்படி செய்து விட்டனர். அந்த ஸ்திரீக்கு செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை. அவளிடம் நான் தெய்வீக சுகமளித்தலைக் குறித்துப் பேச விரும்பினேன். அவள், “ஐயா, நீர் தேவனாகிய கர்த்தருடைய ஊழியக்காரர், நீர் என் வீட்டுக்கு வர நான் தகுதியுள்ளவள் அல்ல,'' என்றாள். ஒரு ஊழியக்காரன் வருவதற்கு தன்னைத் தகுதியற்றவளாக எண்ணினாள்.அவள்,''என்வாழ்க்கைமோசமானது.நான் நடனமாடினேன். நான் செய்யத்தகாதவைகளைச் செய்யப்பிரியப்பட்டேன். நான் கெட்ட வார்த்தை பேசினேன்,'' என்று இவ்விதமாக தன் பாவங்களை என்னிடம் எடுத்துக் கூறி, ''அதற்கு நான் தகுதியுள்ளவள் அல்ல'' என்றாள். 65.அவள் சரியான வழியை அடைகிறாள் என்பதை நான் கண்டேன். அந்த ஆறாம், மேம்பட்ட புலன் கிரியை செய்வதற்கு முன்பு அவள் இங்கே கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாங்கள் முழங்கால்படியிட்டோம். உங்கள் பாவங்கள் சிவேறென்றிருந்தாலும் என்பதைக் குறித்து நான் அவளிடம் பேசினேன். அவள் தன் ஜீவியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தாள். அவள் அவ்விதம் செய்தபோது அவள்,“ஓ, ஓ, எனக்கு வித்தியாசமான உணர்வு தோன்றுகிறது. எனக்கு ஏதோ சம்பவித்துவிட்டது. எனக்கு ஏதோ சம்பவித்து விட்டது. உங்கள் அனைவருடனும் நான் கைகுலுக்க விரும்புகிறேன்'' என்றாள். அப்பொழுது நான் வெளியே பார்த்தேன். அவள் தன் வீட்டுக்குப் பின்னால் உள்ள கோழிக் கூண்டுக்குச் செல்வதை ஒரு தரிசனத்தில் கண்டேன். நான், 'திருமதி.வீவர், தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது, நீ கோழிக்கூண்டுக்கு நடந்து செல்வாய், நீ உயிர் வாழ்வாய்,'' என்றேன். 66.அவள் அப்பொழுது இருந்த நிலையில் அவளால் போக முடியாது. புற்று நோய் அவளைத் தின்று விட்டிருந்தது. மருத்துவரின் கருத்துப்படி அவளால் போக முடியாது;அவள் மரித்துக் கொண்டிருந்தாள். அது பதினான்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன், அப்படித்தானே திருமதி வீவர்? (திருமதி.வீவர் ''பதினான்கு'' என்கிறாள்- ஆசி) பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவள் வியாதியாயிருந்த போது தடுமாறிக் கொண்டே இந்த கூடாரத்துக்கு வந்தாள். அவள் படுக்கையை விட்டு எழுந்திருப்பாள் என்று தோன்றவேயில்லை, அவளுடைய கைகள் வெறும் எலும்பாயிருந்தன. அவள் கூடாரத்துக்கு ஏன் வந்தாள் என்றால், அவள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவாளென்று தேவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தாள். அவளை நாங்கள் சக்கர நாற்காலியிலிருந்து தூக்கியெடுத்து, வேறொரு நாற்காலியில் உட்கார வைத்து அவளை குளத்துக்கு கொண்டு சென்று, அவளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தோம். இதோ அவள் இன்றிரவு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆரோக்கியமுள்ள ஒருத்தியை நீங்கள் காண வேண்டுமென்றால் அவளைப் பாருங்கள். ஏன்? யோசனைகளையும் விஞ்ஞான ஆய்வுகளையும் மற்றவைகளையும் அவள் ஒரு புறம் தள்ளிவைத்து விட்டாள், ஏனெனில் ஆறாம் புலன் கிரியை செய்யத் தொடங்கினது. அது தான். 67.பாருங்கள், இதை மறுபடியும் கூறுகிறேன், ஒரு நிமிடம் கேளுங்கள். ஒரு முறை இயேசு ஒரு மரத்தைக் கடந்து சென்றார்,அது அத்திமரம். அவர் அத்திமரத்தை நோக்கினார். இப்பொழுது, தயவுசெய்து, இதைக் காணத் தவறாதீர்கள். அவர் அத்தி மரத்தை நோக்கின போது, அதில் அத்திப் பழங்கள் எதுவும் இல்லை. அவர் அத்திமரத்தை சபித்து, “ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன்,'' என்றார். சீஷர்கள் அதை நோக்கின போது, அந்த மரம் எப்பொழுதும் போலவே காணப்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் அது அப்படியே இருந்தது. தேவன் பூமியைப் பிளந்து அதை விழுங்கி விடவில்லை. தேவன் வானத்திலிருந்து மின்னலை அனுப்பி அதை கரியாக எரித்து விடவில்லை. அவர் அவ்விதம் செய்திருக்கக்கூடும், நிச்சயம் அவரால் முடியும். ஆனால் அவர் அவ்விதமான காரியங்களைச் செய்யவில்லை. என்ன நடந்தது? மரமானது சபிக்கப்பட்டது. தேவனுடைய விசுவாசம் அந்த மரத்தின் ஜீவனுக்கு எதிராக வைக்கப்பட்டது. மரத்தின் வெளித்தோற்றத்தில் நீங்கள் ஒன்றையும் காண முடியவில்லை. ஆனால் பூமிக்கு அடியில், மரத்தின் வேர்களில் மரணம் தொடங்கினது. அது சபிக்கப்பட்டு விட்டது. ஆறாம் புலன் அதற்கு விரோதமாக வந்து விட்டது. அது பட்டுப்போகத்தான் வேண்டும். அது வேர்களிலிருந்து பட்டுப்போனது. 68.அதுதான் புற்று நோயின் விஷயத்திலும் நடக்கிறது. அது தான் கட்டியின் விஷயத்திலும் நடக்கிறது. ஆறாம் புலனாகிய தேவனாகிய கர்த்தருடைய வல்லமை எந்த வியாதிக்கும் எதிராக எழும்பும்போது, அதுதான் நடக்கிறது. ''சாத்தானே,அங்கிருந்து வெளியே வா,'' என்று உரைக்கும் போது, உடனடியாக உடல் நிலை மாறுவதை நீங்கள் ஒருக்கால் காணாமலிருக்கலாம். ஆனாலும் அந்த விசுவாசம் அதைக் பற்றிக்கொள்கிறது. அது சபிக்கப்பட்டு விட்டது. அந்த ஆறாம் புலன், அந்த மேம்பட்ட புலன், அதைப் போக விடாது. அது, நீங்கள் எவ்விதம் உணருகிறீர்கள், எவ்விதம் காணப்படுகிறீர்கள், எவ்விதம் நடந்து கொள்கிறீர்கள் என்பதன் பேரில் கவனம் செலுத்தாது. அதனுடன் அது யாதொரு சம்பந்தமும் கொள்ளாது. தேவனுடைய வார்த்தை உரைக்கப்பட்டுவிட்டது. ஆறாம் புலன் அதை பற்றிக் கொள்கிறது. அவ்வளவுதான். அது கிரியை செய்யத்தொடங்குகிறது. புற்று நோய் சுருங்கத் தொடங்குகிறது.அது வேர்களில் படிகிறது. அது போய் விடுகிறது. நிச்சயமாக. 69.அதே ஆறாம் புலனின் சக்தியால், ராஜ்யங்கள் உடைந்து போயுள்ளன, ஒரு மதிலுக்கு மேல் மற்றொரு மதில் நொறுங்கி விழுந்து போயுள்ளன. இந்த ஆறாம் புலனால், சிவந்த சமுத்திரம் பின்னால் தள்ளப்பட்டு,உலர்ந்த தரை தேவனுடைய பிள்ளைகள் தப்பிச் செல்ல வழி கோலியது. அதே ஆறாம் புலனால், சிம்சோன் ஆயுதங்களையும் ஈட்டிகளையும் ஏந்தியிருந்த ஆயிரம் பெலிஸ்தியரை எதிர்த்தான். அவனைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு கழுதையின் தாடையெலும்பைத் தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை. அந்த ஆறாம் புலன் கிரியை செய்யத் தொடங்கினது, அவன் ஆயிரம் பெலிஸ்தியரை முறியடித்தான். அல்லேலூயா! இந்த ஆறாம் புலனால் மரித்தோர் எழுப்பப்பட்டனர். இந்த ஆறாம் புலனால், மகத்தான அற்புதங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை உலகில் தோன்றிய மிக வல்லமையுள்ள சக்தி ஆறாம் புலன் என்று அழைக்கப்படும் அந்த மேம்பட்ட புலன். அது இங்கு உள்ளேயுள்ளதுடன் சம்பந்தப்பட்டதல்ல. உள்ளேயுள்ள இது அதை ஆமோதித்து 'ஆமென்' என்று சொல்லுமானால், அது நல்லது, நீங்கள் முன் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இது என்ன செய்த போதிலும், அதை விசுவாசியுங்கள். அங்கு தான் வல்லமையுள்ளது. ''உன் இருதயத்தில் விசுவாசித்தால்.'' சிந்தித்தலான உங்கள் ஐந்தாம் புலன், உங்கள் மூளையில் உள்ளது, ஆனால் உங்கள் ஆறாம் புலனோ உங்கள் இருதயத்தில் உள்ளது. உங்கள் இருயத்தில் நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள், உங்கள் வாயினால் அறிக்கையிடுகின்றீர்கள். உங்கள் இருயத்தில் நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். ஆம். ஐயா! அந்த ஆறாம் புலன், அந்த வல்லமையுள்ள சக்தி. 70.கவனியுங்கள், அந்த புலனின் காரணத்தால், ஒரு தீர்க்கதரிசி சிங்கங்களின் கெபியில் போடப்பட்ட போது, சிங்கங்கள் தானியேலைத் தின்று போட முடியவில்லை. அவைகளால் முடியவில்லை.அந்த புலன், மேம்பட்ட புலனின் காரணத்தால், அவை அவனை நெருங்க முடியவில்லை. அந்த அதே ஆறாம் புலனால், மூன்று எபிரெய பிள்ளைகள் எரிகிற அக்கினிச் சூளையில் போடப்பட்ட போது, அவர்கள் சூளையின் அக்கினி ஜுவாலையை எதிர்த்து நின்றனர். அந்த ஆறாம் புலன் எல்லா யோசனைகளும்,அவர்கள் அதில் தூக்கியெறிப்படும் முன்பே எரிந்து மடிந்து போவார்கள் என்று நிரூபிக்கும். ஆனால் அந்த ஆறாம் புலனோ அவர்கள் எரிந்து போகாமல் இரண்டு மூன்று மணி நேரம் அங்கு தங்கியிருக்கும்படி செய்தது. அவர்கள் சூளையைத் திறந்த போது, தேவகுமாரனைப் போல் ஒருவர் அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருப்பதைக்கண்டனர். அது ஆறாம் புலன். அக்கினி அதை சுட்டெரிக்கவில்லை. ஆம், ஐயா. 71.ஒரு முறை, அந்த அதே ஆறாம் புலன் தான், அப்போஸ்தலனாகிய பேதுரு சிறைச்சாலையில் வைக்கப்பட்டு, அவர்கள் அடுத்த நாள் அவனைச் சிரச்சேதம் பண்ண எத்தனித்திருந்த போது, மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானின் வீட்டில் அவர்கள் ஜெபக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது, ஆறாம் புலன் சிறைச்சாலையைச் சுற்றிலும் ஒன்று திரளத்தொடங்கினது, அவன் அங்கு ஜெபத்தினால் மூடப்பட்டிருந்தான். அந்த ஆறாம் புலன் கிரியை செய்யத் தொடங்கினது. அக்கினி ஸ்தம்பம் ஜன்னலின் வழியாய் உள்ளே வந்து பேதுருவைத் தட்டி, “எழுந்திரு, இங்கிருந்து வெளியே நட” என்றது. ஆறாம் புலன்'. அந்த ஆறாம் புலன் தான். பரி. பவுல் சென்று கொண்டிருந்த அந்த சிறு கப்பல் சேதமடைந்து தண்ணீரால் நிறைந்த போது காப்பாற்றினது. அந்த ஆறாம் புலன்,அந்த மேம்பட்ட புலன் அவனை மூழ்க விடாமல் காத்தது. அந்த ஆறாம் புலன் தான் சர்ப்பம், அவன் கையைக் கவ்வி, அவன் அதை தீயில் உதறிப் போட்டு ஒரு தீங்கும் நேரிடாதபடி அவனைக் காத்தது. ஆறாம் புலன் தான் அதை செய்தது. 72.அந்த ஆறாம் புலன் தான், இயேசுகிறிஸ்து பூமியில் அடக்கம் பண்ணப்பட்டபிறகு, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினது, ஏனெனில் அவர் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தார். அவர், ''இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்றாம்நாளில் அதை எழுப்புவேன்,“ ”உம்முடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்'' என்று தாவீது சொல்லியிருக்கிறானே'' என்றார். அந்த மேம்பட்ட புலன்தான் மற்ற புலன்களின் யோசனைகளை தள்ளிவிட்டது. இயேசு கிறிஸ்து அளிக்கும் மேம்பட்ட புலனில், விசுவாசம் என்னும் புலனில், விசுவாசம் கொண்டிருங்கள். அந்த அதே புலனால், வெறுமையாயிருந்த போது தேவன் உரைத்தார். அந்த புலன் எது? அந்த மேம்பட்ட புலன், தேவன், உங்களில் உள்ள தேவனுடைய விசுவாம், உங்களுக்குள் வந்து உங்களுக்கு மேம்பட்ட புலனை அளிக்கும் தேவனுடைய பாகம். அந்த அதே மேம்பட்டபுலனைக் கொண்டு, இல்லாதவைகளி லிருந்தும், தோன்றப்படாதவைகளிலிருந்தும் தேவன் உலகத்தை உண்டாக்கினார். அவர் தமது வார்த்தையை உரைத்து, அவருடைய வார்த்தையை விசுவாசித்தார், அப்பொழுது உலகம் உண்டானது. மகிமை ! 73.ஆறாம் புலன், மேம்பட்ட புலன், ஓ தேவனே, அதை என் மேல் ஊற்றுவீராக. அதை எனக்கும் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் தந்தருளும். கர்த்தாவே, உம்முடைய ஆறாம் புலனை எனக்குள் ஊற்றுவீராக. இந்த ஐந்து புலன்களையும்,அதனால் ஏற்படும் என் சொந்த அறிவு, சிந்தனைகள் அனைத்தையும் ஒப்புவிக்க சித்தமாயிருக்கிறேன், எல்லா யோசனைகளையும் தள்ளி விடுகிறேன். உமது வார்த்தை சத்தியமும், எல்லா மனிதருடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக. ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு சந்தேகமும் புறம்பே தள்ளப்பட்டு, மேம்பட்ட புலனை, பரிசுத்த ஆவியின் புலனைக் கொண்டவனாய் நடப்பேனாக. உங்களுக்கு அது வேண்டும் அல்லவா? அது தான் நமக்கு வேண்டும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நண்பரே, அதுதான் உங்களுக்குத் தேவை. அந்த மேம்பட்ட புலன் ஒன்றைக் கேட்கும்பொழுது, அவர் அதைக் கொடுப்பார் என்று அறிந்துள்ளது. அது நிச்சயித்திருக்கிறது. ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.'' 74.ஆறாம் புலன், “தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார். என்னை அவருக்கு ஒப்புவிக்கிறேன்.எனக்குள்ள எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவிக்கிறேன். என் ஆறாம் புலன் தேவனுடைய வார்த்தையில் எனக்குள்ள விசுவாசம், இது நிறைவேறும் என்று உரைக்கிறது,'' என்று சொல்லும். ஆபிரகாம் தேவனை சந்தித்தான். தேவன், “சாராளின் மூலம் உனக்கு ஒரு பிள்ளை பிறப்பான்,'' என்றார். அவனுக்கு எழுபத்தைந்து வயது,சாராளுக்கு அறுபத்தைந்து வயது. ஆபிரகாம் அதற்கு முரணான எதையும் அது இல்லாதது போல் பாவித்தான். அவன் தேவனைக் கண்டு, அதில்நடந்து, அதை விசுவாசித்தான். அவன் குழந்தை பெற முடியாது என்று கூறின அனைத்தையும், எல்லா யோசனைகளையும் அது இல்லாதது போல் பாவித்தான். ஒரு வேளை மருத்துவர், ''ஆபிரகாமே உனக்கு அதிக வயதாகி விட்டதால் உனக்கு கிடைக்காது“ என்று கூறியிருக்கலாம். மருத்துவர் அவ்விதம் கூறினதால், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. யார் என்ன கூறின போதிலும், அவனுடைய சுய சிந்தை என்ன கூறின போதிலும், தேவன் உரைத்ததே சரி, அவன் அதில் நிலைகொண்டிருந்தான். 75.அது தான் ஆறாம் புலன், மேம்பட்ட புலன், ''தேவனே,அதை எனக்குத் தாரும். தேவனே, அதை நான்இன்னும் அதிகமாக பெற்றுக் கொள்ளட்டும்,'' - அவருடையமக்களுக்கு ஊழியம் செய்ய. அதுவே என் ஜெபம். இன்று காலை அந்த தாய் சிகப்பு தலை மயிர் கொண்ட அவளுடைய குழந்தையைக்கொண்டு வந்து இங்கு நின்ற போது, அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிந்தது. நான், “என்னவிஷயம், சகோதரியே,'' என்றேன். 76.இங்கு அண்மையில் பில்லியும் நானும் காரில் சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தோம். சில கறுப்பு நிற பையன்களும் காரில் சாலையில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒரு காரை பக்கவாட்டில் இடித்து விட்டதால், அவர்களுடைய கார் சுழன்று சுழன்று எல்லா பையன்களையும், சாலையின் எல்லா பக்கங்களிலும் தூக்கியெறிந்து விட்டது. அதில் ஒரு சிறுபையன் காரின் அடியில் மாட்டிக் கொண்டு விட்டான். அவனுடைய முதுகு காருக்கடியில் சிக்கிக் கொண்டது. பையன்கள் வெளியே குதித்து காரைத் தூக்கத் தொடங்கினர். அவன்,''ஓ, தயவு செய்து தூக்காதீர்கள், என் முதுகு உடைகிறது! வேண்டாம்! என்னைக் கொன்று விடுவீர்கள்! என்னைக் கொன்றுவிடுவீர்கள்! அதை செய்யாதீர்கள்'' என்றான். அவர்கள், “ஓ, காரை நாங்கள் உன்னை விட்டு தூக்கி விட வேண்டும். அது தீப்பிடித்து எரிகிறது என்றனர். அவன், ''அதை நகர்த்தாதீர்கள், நீங்கள் என்னை கூழாக்கி சாகடித்து விடுவீர்கள்! அப்படி செய்யாதீர்கள்! அப்படி செய்யாதீர்கள்' என்றான. நான் அந்த பையனிடம் “மகனே, நீ கிறிஸ்தவனா?'' என்று கேட்டேன். அவன், “இல்லை, ஐயா” என்றான். ''நீ ஜெபம் செய்வது நல்லது'' என்றேன். அவனும் ''சரி ஐயா'' என்றான். ஆறாம் புலன் கிரியை செய்யத் தொடங்கினது. நான் காரின் பின்னால் சென்றேன். அது எப்படி நடந்தது என்று எனக்கு நியாயத்தீர்ப்பு வரைக்கும் தெரிய வாய்ப்பில்லை,ஆனால், திடீரென்று, அவன் மேலிருந்த அந்த கார் பக்கவாட்டில் புரண்டது. அவன் குதித்தெழுந்தான், அவனுக்கு ஒன்றும் நேரிடவில்லை. அது என்ன? ''ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணை.'' 77.நாங்கள் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்தோம்.... ஒரு கறுப்பு நிற இளம் பெண் ஒரு புது ப்ளைமவுத் காரில் சாலை வழியாக வந்து கொண்டிருந்தாள். அவள் நானூறு மைல்கள் ஓட்டினதாக காரின் மைல் காட்டி காண்பித்தது. அவள் நல்ல வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தாள். நான் காரைக் கண்டேன். அது மரத்தை நோக்கி ஓடி அதன் க்ராங்க் அச்சு அதில் மோதிக் கொண்டது. நானும் பில்லியும் எங்கள் காரை நிறுத்தினோம். எங்களுக்கு முன்னால் வழக்கமாக பனி பெய்து வழுக்கும் சாலை இருக்கும். ஆனால் அன்று அது உலர்ந்திருந்தது. அந்தப் பெண்... காற்று பலமாக மின்னஸ்ஸோட்டாவில் அடித்ததால், அது காரை தூக்கி மரத்தில் மோதினது. பில்லி, உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் அவளிடம் ஓடிச் சென்றேன். அவள் அங்கு உட்கார்ந்த நிலையில் இருந்துகொண்டு, “ஓ, நான் மரித்துக் கொண்டிருக்கிறேன், நான் மரித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றாள். அவர்கள் நோயாளி வண்டியை வரவழைத்தனர். நோயாளி (Ambulance) வண்டி வந்தது, அதன் பின்பாகத்தில் ஒரு மனிதனின் சவம் கிடத்தப்பட்டிருந்தது. ஊர்தி ஓட்டுநர், என்னால் அவளைக் கொண்டு போக முடியாது'' என்று சொல்லி விட்டான். எனவே ஒரு பண்ணையாளன்,' 'வேறு யாரையாகிலும் வேகமாக அனுப்பு. அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்,'' என்றார். நான் அவளிடம் நடந்து சென்று, “பெண்ணே ,ஒரு நிமிடம்” என்றேன். அவள், “ஓ, என்னைத் தொடாதீர், ஐயா. என்னைத் தொடாதீர். என் முதுகு ,!'' என்றாள். நான், 'பெண்ணே , நீ கிறிஸ்தவளா?,'' என்றேன். அவள் என்னை உற்று நோக்கினாள். நான், ''நான் சுவிசேஷத்தின் ஊழியக்காரன். நீ மரித்துக் கொண்டிருப்பாயானால், உனக்கும் தேவனுக்கும் இடையே எவ்விதம் உள்ளது?'' என்றேன். ஐயா இப்பொழுதே நான் சரியாக விரும்புகிறேன் என்றாள். அப்பொழுது ஆறாம் புலன்கிரியை செய்யத் தொடங்கினது. தேவனுடைய வல்லமை இறங்கி வந்தது. அவள் யாருடைய உதவியும் இல்லாமல் காரை விட்டு வெளியே நடந்து வந்தாள். தேவனுடைய வல்லமை பிரசன்னமாயிருந்தது. ''ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணை.'' நாம் விசுவாசத்தினால் நடக்கிறோம். நாம் விசுவாசத்தினால் வாழ்கிறோம். ''விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். ''நாம் அந்த விதமாக வாழ வேண்டும். எத்தனை பேர் அந்த ஆறாம், மேம்பட்ட புலனை இன்னும் அதிகமாகப் பெற வாஞ்சிக்கிறீர்கள்? (சபையோர் 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) அப்படியானால் நாம் தலைவணங்கி ஜெபிப்போம். 78.விலையேறப் பெற்ற கர்த்தாவே, எங்கள் தேவனும் பிதாவும் மாயிருப்பவரே, நீர் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருக்கிறீர். இந்த புவியில் நாங்கள் வாழ்வதற்கும் நடப்பதற்கும் புவியிலுள்ளவைகளைத் தொடுவதற்கும் எங்களுக்கு ஐம்புலன்களைத் தந்திருக்கிறீர். நாங்கள் தொட்டு உணர வேண்டிவைகளை, எங்கள் கைகளால் தொட்டு உணர முடிகிறது. நாங்கள் கேட்பதற்கு எங்களுக்கு கேட்கும் தன்மையைக் கொடுத்திருக்கிறீர். அதன் மூலம் நாங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்க முடிவதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர் களாயிருக்கிறோம். 'விசுவாசம் கேள்வியினால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனால் வரும். இந்த ஆறு புலன்களுக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே. அவைகளை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றிக் கொள்வோமாக. ஆனால் விசுவாசிக்கு உரிமையான இந்த மேம்பட்ட புலன், விசுவாசம் என்னும் புலன் - அவன் விசுவாசிப்பதற்கென அதை பெற்றிருத்தல் அவசியம். கர்த்தாவே,அதை அதிகமாக எங்களுக்குத் தாரும். ஓ, எங்களைச் சுத்திகரித்து, கர்த்தாவே, எங்களைச் சோதித்துப் பார்த்து, உமது நன்மையினாலும் வல்லமையினாலும் எங்களை நிரப்பியருளும். எங்கள் வாழ்நாள் முழுவதும்,இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே அளிக்கப்படக் கூடிய அந்த ஆறாம் புலனால், விசுவாசம் என்னும் புலனால் நாங்கள் நடப்போமாக. அந்த ஆறாம் புலனைப் பெற்றுக் கொள்வோமென்று எங்கள் இருதயத்தில் எவ்வித சந்தேகமுமின்றி விசுவாசிப்போமாக. அது அருளப்படுமென்று நீர் வாக்கருளியிருக்கிறீர். கர்த்தாவே, கைகளை உயர்த்தினவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்களுக்கு தேவைகள் உண்டு. அவை என்னவென்று நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவைகளை நீர் அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அது நிறைவேறுவதாக - அவர்களுடைய வாஞ்சைகள். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென். 79.பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்தஆவியில் விசுவாசம், இம்மூவரும் ஒருவரே பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர் யேகோவாவில் விசுவாசம் எதையும் அசைக்கும். இதை நீங்கள் முன்பு கேட்டிருக்கிறீர்களா? இப்பொழுது இசை இல்லாமல், ஒரு நிமிடம், ஐயா. பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்தஆவியில் விசுவாசம், இம்மூவரும் ஒருவரே பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர் யேகோவாவில் விசுவாசம் எதையும் அசைக்கும். 80.அது உண்மை . ஓ, என்னே ! விலையேறப் பெற்ற விசுவாசம்! விலையேறப்பெற்ற, மகிமையுள்ள விசுவாசம்! தேவனே, எனக்கு விசுவாசத்தைத் தாரும். 'விசுவாசத்தினாலே ஆபிரகாம். விசுவாசத்தினாலே ஈசாக்கு. விசுவாசத்தினால் ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். ''ஓ, நமக்கு விசுவாசம் எவ்வளவு அவசியமாயுள்ளது. அவரை நான் நேசிக்கிறேன். எனக்கு விசுவாசம் அதிகம் வேண்டும். என் வாழ்க்கையில், வரப்போகும் இப் புத்தாண்டில் எனது வாஞ்சை தேவனிடத்தில் அதிக விசுவாசம் கொண்டிருப்பதே. தேவனே, என் மனதில் ஏதாகிலும் சந்தேகம் எழுமானால், அதை அகற்றிப்போடும். சாத்தான் என்னை எதிர்க்கிறான். உங்களை எதிர்க்கிறான், அவனுடைய அம்புகளை எய்கிறான். ஆனால், பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்க, அவனுடைய அக்கினியாஸ்திரத்தை வீழ்த்த,எனக்கு முன்னால் விசுவாசம் என்னும் அந்த கேடயத்தைப் பிடித்துக் கொண்டிருப்பேனாக என்பதே என் உத்தமமான ஜெபம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஏதாவது சொல்ல வேண்டுமா, சகோ. நெவில்? (சகோ.நெவில், “இல்லை, இது மட்டும்...'' என்கிறார் - ஆசி. வாருங்கள் (சகோ. நெவில் அறிவிப்புகள், சாட்சி,முடிவான ஜெபத்தை செய்கிறார்).